பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ல

68

திருவாய்மொழி - ஏழாம் பத்து

லாவதில்லையாதலின் ‘ஒருவனே’ என்கிறது. 1தான் வீரபத்நி என்னுமிடம் தோன்றச் சொல்லுகிறாள் ‘உட்குடை அசுரர் உயிர் எலாம் உண்ட’ என்று. 2‘பெருமாள் யானைப்போல எண்ணப்படுகிறார்; நீ அற்ப முயலைப்போல எண்ணப்படுகிறாய்’ என்னுமவள் அன்றோ? உள் உருகும், - ‘இப்படித் தடைகளையெல்லாம் போக்குமவன் வரக் காணாமையாலே, என்ன குறை உண்டாய் இழக்கிறேன்?’ என்று மனம் உருகுவாள். என்றது, ‘காலம் நீட்டித்தலுக்குக் காரணம் இன்றிக்கே இருக்க, பலியாது ஒழிந்தாவாறே நீர்ப்பண்டம் போலே உருகுவாள்’ என்றபடி. 3‘உருகின மாத்திரத்தில் கண்களால் காண முடியாத பொருள் கண்களுக்கு இலக்கு ஆமோ?’ என்பார்களே; 4‘அருளாலே பெறுவார்க்கு அங்ஙன் ஒரு நியதி உண்டோ?’ என்னமாயிற்று இவள். 5‘கண்ணால் காண்கிறான் இல்லை’ என்கிறது, தாம் தாமே காண இழிவார்க்கு; 6‘தனது அருளுக்கு இலக்கானவனுக்கு இந்தப் பரமாத்துமா தனது வடிவை நன்கு காட்டுகிறான்,’ என்கிறபடியே அவன்தானே காட்டுமன்று அருமை இல்லை. 7அருச்சுனன் முதலோர்க்கு ஞானக் கண்ணைக்

________________________________________________________________

1. ‘உட்குடை அசுரர்’ என்று, அவர்களுடைய வீரத்தைச் சொல்லி, ‘உயிரெலாம் உண்ட’
  என்று சொன்னதற்கு பாவம், ‘தான் வீரபத்நி’ என்று தொடங்கும் வாக்கியம்.

2. அப்படி, தன் நாயகனுடைய வீரம் தோன்றச் சொன்னதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
  ‘பெருமாள்’ என்று தொடங்கி.

        ‘தவம் நீசஸஸவத்’

என்பது, ஸ்ரீராமா. சுந்.22:16, இது பிராட்டி கூற்று.

3. ‘கட்கிலீ’ என்றதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘உருகின மாத்திரத்தில்’ என்று
  தொடங்கி.

4. ‘கட்கிலீ’ என்றதனால் போதருகின்ற கண்களால் காணமுடியாமையைப் பற்றித்
  தாய்மார் சங்கித்ததனைப் பரிஹரித்துக்கொண்டு, ‘உன்னைக் காணுமாறு அருளாய்’
  என்றதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘அருளாலே’ என்று தொடங்கி.

5. ‘பரம்பொருளைக் ‘கண்ணால காண்கிறான் இல்லை’ என்று இருக்கிறதே?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘கண்ணால்’ என்று தொடங்கி. ‘ந சக்ஷூஷா
  பஸ்யதி’ என்பது, தைத். நாரா.

6. ‘தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே ததும் ஸ்வாம்’ என்பது, உபநிடதம்.

7. ‘அப்படி நாம் யாருக்குக் காட்டினோம்?’ என்ன, ‘அருச்சுனன்’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.