New Page 1
|
இரண்டாந்திருவாய்மொழி - பா.
7 |
83 |
பொருட்டாகும்’ எனபது தொல்காப்பியம்.
கோமளம் - மிருதுத் தன்மையுமாம்.
ஈடு :
ஏழாம் பாட்டு. 1‘அவர் அவர்ளுடைய அளவுகளை நினைந்து, பொறுக்கும் அளவுகளிலே அன்றோ
சுக துக்கங்களைச் சுமத்துவது? இப்படி என்னைப் படுத்தலாமோ?’ என்னாநின்றாள் என்கிறாள். அன்றிக்கே,
அடியார்களை வாழ்விக்கையும் அடியார் அல்லாதாரை நலிகையும் அன்றிக்கே, இப்போது விபரீதமாயிற்றோ
உம்முடைய படி என்கிறாள்’ என்று பிள்ளான் பணிக்கும். அன்றிக்கே, ‘இக்கோமளக் கொழுந்துக்குக்
கைம்முதல் ஒன்றுமில்லாதார் பற்றினால் பாதுகாக்கக்கடவ நீர்மையையுடையவன் சந்நிதியிலே இவை
எல்லாம் படவேண்டுகிறது, என்னுடைய சம்பந்தம் என்று எண்ணுகிறாள்’ என்னுதல்.
பால துன்பங்கள்
இன்பங்கள் படைத்தாய்-இடம் அறிந்து சுக துக்கங்களைப் படைத்தவனே! ‘பால்’ என்றது, இடம் என்றபடி
அப்பால் இப்பால் என்றால், அவ்விடம் இவ்விடம் என்றபடியன்றோ? பாலவாக - அந்த இடத்தே அந்த
இடத்தேயாக. 2உம்மைப் பிரிந்தார் எல்லாருமனுபவிக்கும் துக்கத்தை இவள் ஒருத்தியுமே
அனுபவிக்கப் பார்த்தால் இவளால் பொறுக்கப் போமோ? அன்றிக்கே, அடியார்கள் வாழவும் அடியார்
அல்லதார் கெடும்படியாகவுமன்றோ
________________________________________________________________
1. ‘பால துன்பங்கள் இன்பங்கள்
படைத்தாய்’ என்றதற்கு அருளிச்செய்யும்
இருவகையான பொருள்களுக்கும் தகுதியாக இரண்டு அவதாரிகையும்,
‘என்னுடைக் கோமளக் கொழுந்து, கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும்,
பற்றிலார் பற்ற நின்றனே’
என்கிற பதங்களிலே நோக்காக ஓர் அவதாரிகையும்
ஆக, மூன்று வகையாக அவதாரிகை அருளிச்செய்கிறார்.
‘அவர் அவர்களுடைய
அளவுகளை நினைந்து’ என்றது, பொறுக்கக்கூடியவர்களை விசாரித்து என்றபடி.
‘இப்போது விபரீதமாயிற்று. என்றது, அடியாளான இவளைத்துக்கம் அனுபவிப்பிக்
கையை நினைத்து.
2. ‘பால
துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்’ என்கிற தலைமகள் வார்த்தையை
அனுவதிக்கிற திருத்தாயாருடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘உம்மைப்
பிரிந்தார்’ என்று தொடங்கி. ஆக, ‘பால’ என்று
தொடங்கும் தொடருக்கு,
‘பொறுக்கத்தக்க இடம் அறிந்து அந்த அந்த இடங்களிலே சுகதுக்கங்களைப்
படைத்தவனே’ என்பது முதற்பொருள்; ‘அடியாரான முறையிலே சுகத்தையும்,
அடியரல்லாதார் என்ற முறையிலே
துக்கத்தையும் அனுபவிக்கப் படைத்தவனே’
என்பது இரண்டாவது பொருள்.
|