ந
|
84 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
நீ செய்து வைத்தது?
பால் - முறை. 1பண்டு கட்டின மரியாதையும் இவளுக்கு இல்லையோ? 2‘செய்குந்
தாவருந் தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தன் அன்றோ? 3‘பால்’
என்பதற்கு, பாகம், இயைபு, இடம், நியாயம் என்பன பொருளாம். ‘தங்கள் தங்களால் பொறுக்க ஒண்ணாதனவற்றைத்
தாங்கள் தாங்களே ஏறிட்டுக்கொள்ளும் போது நம்மால் செய்யலாவது உண்டோ? நம்பக்கல் குறை இல்லை;
பேறு தங்கள் தங்களதானால் தாங்களும் சில செய்யவேணும் என்று அவனுக்குக் கருத்தாக, அதற்கு விடை
அருளிச்செய்கிறாள் மேல்: பற்றிலார் பற்ற நின்றானே - 5‘ஒரு கைம்முதல் இல்லாதார்க்காக
அன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று? இந்தக் கிடை நித்தியசூரிகளுக்காகவோ? உம்முடைய பக்கல்
பற்று அறுத்துக்கொண்ட ஜயந்தன் போல்வார்க்கும் பற்றாய் இருக்குமவர் அன்றோ நீர்!’
‘அந்தப் பெருமாளையே சரணமாக அடைந்தான்’ என்றே அன்றோ கூறுகிறது ஸ்ரீராமாயணம்?
6‘அது
உண்டானலும் அதற்கு ஒரு காலம் உண்டே?’ என்ன, காலசக்கரத்தாய் -‘அந்தக் கலாசக்கரம் நீ இட்ட
வழக்கன்றோ?
_________________________________________________________________
1. இரண்டாவது பொருளுக்குச்
சேர மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘பண்டு
கட்டின’ என்று தொடங்கி.
2. இரண்டாவது பொருளுக்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘செய்குந்தா’ என்று தொடங்கி.
இது, திருவாய். 2. 6 : 1.
3. ‘பால் ‘ என்பது, பல
பொருள் ஓருசொல் என்பதனைக் காட்டுகிறார், ‘பால்’
என்பதற்கு என்று தொடங்கி.
4. ‘பாலதுன்பங்கள் இன்பங்கள்
படைத்தாய்’ என்பதற்கு அருளிச்செய்த
இருவகைப்பொருள்களுக்குத் தகுதியாக, மேலுக்கு இரண்டு வகையாக
அவதாரிகை
அருளிச்செய்கிறார், ‘தங்கள்’ என்று தொடங்கி.
5. மேலே அருளிச்செய்த
இரண்டாவது அவதாரிகைக்கு விடை அருளிச்செய்கிறார்,
‘ஒரு கைம்முதல்’ என்று தொடங்கி. முதல்
அவதாரிகைக்கு உத்தரம்
அருளிச்செய்கிறார், ‘உம்முடைய பக்கல்’ என்று தொடங்கி. ஜயந்தன்
சரணாகதி
அடைந்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘அந்தப் பெருமாளையே’ என்று தொடங்கி.
‘தமேவ ஸரணம் கத;’ என்பது, ஸ்ரீராமா, சுந். 38:34. கம்பராமாயணம்
சூடாமணிப்படலம் 71 முதல் 82
முடிய உள்ள செய்யுள்களைக் காண்க.
6. ‘ஜயந்தன்
போல்வார்க்கும்’ என்று தொடங்கி, மேலே அருளிச்செய்ததற்குத்
தகுதியாகச் சங்கதி அருளிச்செய்கிறார்,
‘அது உண்டானாலும்’ என்று தொடங்கி,
அது உண்டானாலும் - குற்றவாளர்க்கும் பற்றாயிருக்குமது உண்டானாலும்.
|