1அ
|
இரண்டாந்திருவாய்மொழி - பா.
7 |
85 |
1அடியானுக்காகப்
பகலை இரவாக்கினவன் அன்றோ? அன்றிக்கே, 2தடைகள் உண்டே?’ என்ன,
‘தடைகளுக்குக் கூற்றுவனான திருவாழி அன்றோ நீ தரித்திருக்கிறது?’ என்னுதல். ‘பரிகரம் உண்டானாலும்
நான் சேய்மையில் இருப்பவன் அன்றோ?’ என்ன, ‘அங்ஙனம் சொல்ல ஒண்ணாதே?’ என்கிறாள் மேல்:
கடல் இடங்கொண்ட கடல் வண்ணா - 3‘நீ எங்களைக் காலம் பார்த்தன்றோ கிட்டக்
கிடக்கிறது? 4ஒரு கடல் ஒரு கடலிலே சாய்ந்தாற்போலே அணித்தாகத் திருப்பாற்கடலிலே
சாய்ந்திருக்கிறாய் அன்றோ?’ ‘ஆயின், அங்கே வரலாகாதோ?’ என்ன, 5அவ்வலையலைக்
கேட்கமாட்டாத ஆயர்கட்கும் ஆய்ச்சியர்கட்குமாகக் கிருஷ்ணனாய் வந்து உதவினாய் அன்றோ?’ என்கிறாள்
மேல்: கண்ணனே என்னும் - 6‘திருவனந்தாழ்வானாகிற கட்டிலைத் தனக்கு முன்னே சென்று
அவதரிக்கும்படி போகவிட்டு மதுரை என்ற நகரத்திற்கு எழுந்
________________________________________________________________
1. ‘அப்படிக் காலம் நான்
இட்ட வழக்காகக் கண்ட இடம் உண்டோ?’ என்ன,
‘அடியானுக்காக’ என்று தொடங்கி, அதற்கு விடை
அருளிச்செய்கிறார். வில்லிபாரதம்,
14ஆம் போர்ச்சருக்கம், 164 முதம் 173 முடிய உள்ள செய்யுள்களைக்
காண்க.
2. ‘ஒரு கைம்முதல் இல்லாததற்காக’
என்று தொடங்கி மேலே அருளிச்செய்ததற்குத்
தகுதியாகச் சங்கதி அருளிச்செய்கிறார், ‘தடைகள்’
என்று தொடங்கி. ‘காலம்’ என்ற
சொல் காலத்தையும், யமனையும் சொல்லுகிறது. ‘காலசக்கர நிர்வாஹகன்’
என்பது
முதற்பொருள். ‘யமனான சக்கரத்தையுடையவன்’ என்பது இரண்டாவது பொருள்.
3. ‘காலச்சக்கரத்தாய்?
என்றதற்கு அருளிச்செய்த இரு வகைப் பொருளில்
முதற்பொருளால் பலவிதம், அடியார்கள் விரும்புகிற
காலமே பாதுகாப்பதற்குக்
காலம் என்றாய், ‘அப்படி அடியார்கள் விரும்புகிற காலத்தைப் பார்த்திருந்த
இடம்
உண்டோ?’ என்ன, என்னும் சங்கதியைத் திருவுள்ளத்தே கொண்டு வேறும் ஒரு
பாவம் அருளிச்செய்கிறார்,
‘நீ எங்களை’ என்று தொடங்கி.
4. கடல் வண்ணா என்னாமல்
‘கடலிடம்கொண்ட’ என்று விசேடித்ததற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘ஒரு கடல்’ என்று தொடங்கி.
5. ‘அலையலை’ என்றது, அலை
என்று ஒலியாய், அலையலை என்று மிகப் பெரிய
ஒலியாய், மிக்க ஒலியையுடைய கடலைக் காட்டுகிறது.
‘கேட்கமாட்டாத’ என்பது,
‘கிட்ட மாட்டத’ என்றிருப்பது நலம்.
6. ‘கடலிடம் கொண்டவனே
கண்ணனாய் வந்தான்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,’
‘திருவனந்தாழ்வானாகிற’ என்று தொடங்கி.
‘ஏஷ நாராயண: ஸ்ரீமாந்
க்ஷிரார்ணவ நிகேதந:
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி
ஆகதோ மதுராம்புரீம்’
என்பது, பாரதம். ஹரிவம்ஸம்,
113:62. இடையிலே. நடுவே என்பதும் ஆயர்களிலே என்பதும் பொருள்.
|