பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

98

திருவாய்மொழி - ஏழாம் பத்து

யாய் இருக்கையாலே உய்ந்தவன் என்கிறத். மொய்புனல் பொருநல் துகில் வண்ணம் தூநீர்ச் சேர்ப்பன் - வலியையுடைத்தான தண்ணீரோடு கூடின தாமிரபரணியில் துகிலினுடைய வண்ணத்தையுடைத்தான தூநீர்த் துறைவன். ‘மொய்’ என்பதற்கு; ‘மிகுதி’ என்பதும், ‘வலி’ என்பதும் பொருளாம். இங்கே, நீரோட்டத்தால் வந்த வலியை நினைக்கிறது. சேர்ப்பன் - துறைவன்: நெய்தல் நிலத்தின் தலைமகன். ‘மொய்ப்புனல்’ என்னாநிற்கவும், ‘தூநீர்’என்கிறது, பெருவெள்ளமாய் இருக்கச்செய்தே தெளிந்திருக்கும் படியைப்பற்ற. 1‘அழுக்கு அற்ற, தெளிந்த நீரையுடைய, அழகிய, பெரியோர்களுடைய மனம் போன்ற இந்தத் தீர்த்தத்தைப் பாரும்,’ என்கிறபடியே.

    வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் - காண்பதற்கு இனியதான பொழிலையுடைத்தாய் வண்மையையுடைய திருநகரிக்குநாதன். முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் - காளமேகம் போன்று மிக்க பேரெழிலையுடையரான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச்செய்த சொற்களையுடைய மாலை ஆயிரத்து இப்பத்தையும் கருத்தோடு கற்க வல்லவர்கள். ‘பெரிய பெருமாள் திருவடிகளிலே, திருவாய்மொழி ஆயிரமும் சொல்லிற்று; 2‘திருமோகூர்க்கு ஈத்து பத்து’. ‘திருவேங்கடத்துக்கு இவை பத்து’ என்று பிரித்துக்கொடுத்த இத்தனை; பெருமாள் திருப்பலகையில் அழுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்கட்கும் அளந்து கொடுக்குமாறு போலே’

___________________________________________________________________

1. தெளிந்திருப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘அழுக்கு அற்ற’ என்று தொடங்கி.           

        ‘ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந்மநுஷ்ய மநோ யதா’

என்பது, ஸ்ரீராமா. பால. 2:5. 

        ‘சவியுறத்தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
         கவியெனக் கிடந்த கோதா விரியினை வீரர் கண்டார்’

என்பது, கம்பராமாயணம், சூர்ப்பணகைப் படலம், 1. 9

2. ‘ஆயிரமும் பெரிய பெருமாள் விஷயமானால், திருவேங்கடமுடையான்
  முதலாயினார்க்கு இன்றிக்கே போமே?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘திருமோகூர்க்கு’ என்று தொடங்கி. ‘திருமோகூர்க்கு’ என்பது, திருவாய். 10.1:11
  ‘திருவேங்கடத்துக்கு’ என்பது திருவாய். 6.10:11.