பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

என

இரண்டாந்திருவாய்மொழி - பா. 11

99

என்று பிள்ளை அருளிச்செய்வர். முகில் வண்ணம் வானத்து-அங்கு இருக்கிறவனுடைய நிழலீட்டாலே அவன்படியாய் இருக்கிற வானம் என்னுதல்; முகில் வண்ணனுடைய வானம் என்னுதல் இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே-இவள் மோகித்துக் கிடக்கத் திருத்தாயார் தனியே இருந்து கூப்பிட்ட எளிவரவு தீர, நித்தியசூரிகள் திரள இருக்க, அவர்கள் நடுவே ஆனந்தத்தையுடையவர்களாய் இருந்து அனுபவிக்கப் பெறுவார்கள்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        கங்குல் பகலாதி கைவிஞ்சி மோகமுற
        அங்கதனைக் கண்டோர் அரங்கரைப்பார்த்-திங்கிவள்பால்
        என்செயநீர் எண்ணுகின்ற தென்னுநிலை சேர்மாறன்
        அஞ்சொலுற நெஞ்சுவெள்ளை யாம்
              

( 62)

 

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.