பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

மூன

மூன்றாந்திருவாய்மொழி

‘வெள்ளச் சுரிசங்கு’

முன்னுரை 

    ஈடு: 1மேல் திருவாய்மொழியில், ‘இட்டகால் இட்டகை’ என்கிறபடியே, இவள் மோகித்துக் கிடக்க, இவளுக்கு முன்னே தோழிமாரும் தரைப்பட, திருத்தாயார் ஒருத்தியும் இவள் நிலையை நினைந்து அருகே இருந்து கூப்பிட்டுப் போருமதும் தவிர இப்பெண்பிள்ளை தானே எழுந்திருந்து கால் நடை தந்து போமளவாய் விழுந்தது. 2அதற்கு அடி: ‘பற்றிலார் பற்ற நின்றானே’ என்று பெரிய பெருமாளுடைய பற்றிலார் பற்ற நிற்கும் தன்மை தொடக்கமான, இவளுக்குப் பற்றாசான குணங்களையும் அழகு முதலான விக்கிரஹ குணங்களையும் இவள் தான் வாய் வெருவியும் திருத்தாயார் சொல்லவும் கேட்டு அதனாலே தரித்தாள். 3போன உயிரை மீட்கவற்றாயன்றோ குணங்களின் தன்மை இருப்பது? 4மேல் திருவாய்மொழியில் பிறந்த மோகமுந்தெளிந்து பிரிவின் வியசனமும் நினைக்க வல்லளாய், பின்பு, ‘அவனைக் கிட்டியல்லது நில்லேன்’ என்னும்படியான ஆற்றாமையும் பிறந்து, அது பெறாமையாலே துக்கமுடையவளாக, இவள் விடாய்கு ஈடாகும்படி அணித்தாகத் தென்

__________________________________________________________________

1. மேல் திருவாய்மொழிக்கும் இதற்கும் சுருக்கமாக இயைபு அருளிச்செய்கிறார், ‘மேல்
  திருவாய்மொழியில்’ என்று தொடங்கி.

2. ‘மேல் திருவாய்மொழியில் மோகித்துக் கிடந்தவளுக்குத் தெளிவு பிறக்கைக்குக்
  காரணம் ஏன்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அதற்கு அடி’ என்று
  தொடங்கி. 

3. ‘குணங்கள் தரிப்பிக்குமோ?’ என்ன, ‘பொன உயிரை’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார். இவ்விடத்திலே,

    ‘இத: பரம் மிருதஸஞ்ஜீவநீம் ராம வ்ருத்தாந்த கதாம்ஆஹ’

என்ற ஸஹஸ்ரநாம பாஷ்ய வாக்கியத்தை நினைப்பது.

    ‘அவித்தஜம் புலத்தவ ராதி யாயுள
    புவித்தலை யுயிரெலாம் இராமன் பொன்முடி
    கவிக்கும்என் றுரைக்கவே களித்த தாலது
    செவிப்புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம்!’

என்பது, கம்பராமாயணம், அயோத்தியாகாண்டம், ஆற்றுப்படலம், 23.

4. மேலே சுருங்கக் கூறின இயைபினை விரித்து அருளிச்செய்கிறார், ‘மேல்
  திருவாய்மொழியில்’ என்று தொடங்கி