மூலவர் ஒப்பிலயப்பன் (ஒப்பற்றவன்) உப்பிலியப்பன் உப்பில்லா பண்டம் ஏற்பவன் என்பது திருநாமம். திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்ற தோற்றம். நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம் தாயார் பூமிதேவி (பூமிநாச்சியார் எனும் திருநாமம்) உற்சவர் மூலவருக்கும், தாயாருக்கும் உரிய அதே பெயர்கள். இங்கு பெருமாள் மட்டும் தனியே புறப்பாடு ஆவதே இல்லை. எப்போதும் பிராட்டியுடன் சேர்ந்தே செல்வார். விமானம் சுத்தானந்த விமானம் (தரிசிப்பவருக்கு ஆனந்தம் தருவது) விஷ்ணு விமானம் என்றும் பெயர். தீர்த்தம் அஹோராத்ர புஷ்கரணி (இரவு, பகலென்றில்லாமல் 24 மணி நேரமும் நீராடலாம் என்பதால் அஹோராத்ர தீர்த்தமாயிற்று) மற்றும் ஆர்த்தி புஷ்கரிணி, சார்ங்க தீர்த்தம், சூர்ய தீர்த்தம், இந்திர தீர்த்தம். காட்சி கண்டவர்கள் மார்க்கண்டேயர், காவேரி, கருடன். சிறப்புக்கள் 1. திருப்பதி போக இயலாதவர்கள் வேங்கடேசனுக்குச் செய்து கொண்ட பிரார்த்தனைகளை இங்கேயும் செலுத்தலாம். திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு தமையனார் என்கிற ஐதீகம். 2. 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுந்தான் உப்பில்லா நிவேதனம். 3. சிரவண நட்சத்திரத்தன்று (திருவோண நட்சத்திரம்) சிரவண தீபம் எடுத்துக் குறி சொல்லுவது இங்குவிசேஷம்) 4. திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டானதுபோல் இப்பெருமானுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. |