விமானம் ஸ்ரீனிவாச விமானம், ஹேம விமானம். விருட்சம் வில்வ விருட்சம், வகுளம் எனப்படும் மகிழ மரம். தீர்த்தம் இங்கு முக்கியமான 5 தீர்த்தங்களுண்டு மணிமுத்தா புஷ்கரணி சோழன் தெய்வ வாள் பெற்றது. ஸங்கர்ஷன தீர்த்தம் பிரம்மாவின் தோஷம் விலகியது. பிரத்யுமன தீர்த்தம் பானுதத்தன் என்னும் அரக்கனின் சாபந் தீர்ந்தது. அனிருத்தன் தீர்த்தம் இந்திரனின் சாபமகன்றது ஸாம்ப தீர்த்தம் சப்தரிஷிகள் தவம் செய்த பெருமை பெற்றது. காட்சி கண்டவர்கள் மேதாவி முனிவரும் திருமணத்திற்கு வந்திருந்த பிரம்மாவும். சிறப்புக்கள் 1. வ்யூக வாசுதேவனாக இவ்விடத்திற்கு எழுந்தருளிய எம்பெருமான் தனது 5 நிலைகளில் உண்டான சக்தியை தேவிக்கு அளித்து ஸ்ரீனிவாசன் என்னும் திருநாமத்தோடு தேவியை திருமணக்கோலத்தில் ஏற்றுக் கொண்டார். எனவே இத்தலத்தில் திருமாலும் திருமணக்கோலத்திலேயே நின்று அருளுகிறார். இதுவே இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். வ்யூக ரூபத்துடன் எம்பெருமான் இங்கு எழுந்தருளியதும் ஒரு தனிச்சிறப்பாகும். திருமகளை மணம்புரிந்த கோலத்தில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் ஏந்தி சற்றே முன்புறம் வருவதுபோல் ஒரு தோரணை காட்டி பஞ்ச சமஸ்காரம் என்னும் ஸ்ரீ வைஷ்ணவ லட்சணை செய்ய முற்படுதல் போல் (ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு வைணவ |