பக்கம் எண் :

110

அடையாளம் இடுதல்) ஆகமசிற்ப சாஸ்திரத்தில் கூறப்பட்ட அனைத்து
இலக்கணங்களுக்கும் ஒருங்கே பொருந்தியிருக்க எம் பெருமான் இங்கு
எழுந்தருளி இருக்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும். இதுபோன்ற
அழகுத் திருமேனியை வேறுஎந்த திவ்ய தேசத்திலும் சேவித்து விட முடியாது.
இப்பெருமானது அழகு திருமேனியில் திருமங்கையாழ்வார் ஆட்பட்டவிதம்
சொல்லுந்தரமன்று.

     2. பிராட்டி மார்களால் புகழ்பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்று
(இலக்குமி) ஸ்ரீதேவியின் பெருமை திருவரங்கத்தில் என்றால் பூமாதேவியின்
பெருமை திருவில்லிபுத்தூரில் என்றால் நீளாதேவியால் பெருமை பெற்றது
இத்தலமாகும். பிராட்டிக்கு உண்டான நம்பிக்கை நாச்சியார் என்னும்
திருநாமத்தாலே நாச்சியார்கோவில் என்றே பெயர் ஏற்பட்டது என்பர்.
ஸ்ரீவில்லிபுத்தூரை நாச்சியார் திருமாளிகை என்றும், இத்திரு நறையூரை
நாச்சியார் கோவில் என்றும் அழைப்பர்.

     3. முக்தி தரும் 12 ஸ்தலங்களுள் ஸ்ரீனிவாசம் என்னும் தலமும்
இதுதான்.

     4. திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் மன்னும் மணி மாடக் கோயில்
என்று இத்தலத்தை புகழ்கிறார். அதாவது இத்தலம் மாடக்கோவில் அமைப்பில்
உள்ளது. கோபுர வாயிலினின்று நோக்கினால் இப்பெருமான் ஒரு மாடத்தின்
மேல் பொலிந்து நிற்பது போன்று தெரியும். இக்கருவறையின் அமைப்பும்
அதில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் தோற்றமும் ஒரு சிறிய
வடிவமைக்கப்பட்ட மலைமேல் எழுந்தருளியிருப்பது போல் திருமங்கைக்கு
காட்சியானது அதனால்
 

     “தென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளன்
     திருநறையூர் மணி மாடம்” என்றும்
          “திரு.... மணிமாடச் செங்கண் மாலை” என்றும்
     மன்னு மறையூர் திரு நறையூர் மாமலைபோல்
          பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
     என்னுடைய கண்களிப்ப நோக்கினேன்.
          என்று பெரிய திருமடலிலும் போற்றிப் புகழ்கிறார்.