பக்கம் எண் :

111

     5. இத்தலம் சிறிதும் பெரிதுமான 16 கோபுரங்களை உடையது.
ராஜகோபுரம் 5 அடுக்கும் 76 அடி உயரமும் கொண்டதாகும்.
மூலஸ்தானத்திற்கு (கருவறைக்கு) மேல் உள்ள விமானமும், கோபுர
வடிவிலேயே அமைந்திருக்கிறது. இதுபோன்ற அமைப்பினை வேறு திவ்ய
தேசங்களில் அதிகமாக காணமுடியாது.

     கருவறைக்கு மேல் உள்ள விமானம் கோபுரம் போல் அமைந்திருப்பது
இங்கும் திருவல்லிக்கேணியிலும் மட்டுமே.

     6. கோச்செங்கண் என்னும் சோழமன்னன் மிகச் சிறந்த சிவ பக்தன். 63
நாயன்மார்களில் சோழ நாயனார் என்னும் திருப்பெயர் பூண்டவன். இவன்
மாற்றாரிடம் தோற்று நாடு இழந்து, மறைந்து வாழும் போது மணி முத்தா
நதியிலிருந்த முனிவர்களால் இந்நம்பியை வழிபடுமாறு உபதேசம் பெற்று
மணிமுத்தா நதியில் நீராடி, மூழ்கி எழுந்திருக்கையில் தெய்வ வாளினைப்
பெற்று எதிரிகளோடு பொருதி அவர்களை சின்னாபின்னமாக்கி நாட்டை
மீட்டு முடிசூடி வைணவ பக்தனாகவும் மாறினான். இத்தலத்தில் தன் பெயரில்
திருமண மண்டபம் ஒன்றும் கட்டுவித்தான். இப்பெருமானின் முக்கிய
பூஜைக்கு நிலம் அளித்தான். தங்கத்தால் விமானம் அமைத்தான். இம்மன்னன்
நம்பியின் மீது பக்திகொண்டதையும், தெய்வவாள் பெற்றதையும்
திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியில்.
 

     செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில்
          திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
     தெய்வ்வாள் வளங்கொண்ட சோழன் சேர்ந்த
          திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
என்றார்.

     7. கருடாழ்வார் தனிச் சிறப்புற்றுத் திகழும் ஸ்தலமாகும் இது. ஆம்.
இங்குள்ள கருடாழ்வார் மிக்க கீர்த்தியும், பெருஞ்சக்தியும் வாய்ந்தவர், மற்ற
திவ்ய தேசத்து கருடாழ்வார்களைவிட இவருக்கு மகத்துவம் அதிகம்.

     ஒரு சமயம் ஒரு ஊரில் ஒரு சிற்பி ஆகமவிதிகட்கு உட்பட்ட முறையில்
ஒரு கருடனை செதுக்கி வந்தாராம். சிற்பம் முடியும் தருவாயில் கருடனுக்கு
இரண்டு புறமும் 2