சிறகுகளைச் செதுக்கி அதற்குப் பிராணப் ப்ரதிட்டை (உயிரூட்டுதல் போன்ற உயிரோவியமாக) செய்தாராம். உடனே உயிர்பெற்ற கருடன் மேல்நோக்கிப் பறக்க ஆரம்பிக்கவே இதைக் கண்டு அச்சமுற்ற சிற்பி தம் கையில் இருந்த கல் உளியை எடுத்து கருடன் மேல் எறிந்தாராம். மூக்கில் அடிபட்டதால் அந்தக் கருடன் இந்த நாச்சியார் கோவிலில் இறங்கி விட்டாராம். அதன் பின்பும் உயிர்பெற்று எம்பெருமானின் திருவருளால் இத்தலத்திலேயே அமர்ந்து தம்மை வேண்டினோர் அனைவருக்கும் இங்கிருந்தே அருள்பாலித்து வருகிறார் என்பது ஐதீகம். இவர் இத்தலத்தின் மூலஸ்தானத்திற்கு அருகேயுள்ள மகா மண்டபத்தில் சாளக்கிராம வடிவத்தில் நீள்சிறகும், நீள்முடியும், நீண்டு வளர்ந்த திருமேனியுடன் கம்பீரத்தோற்றத்தில் எழுந்தருளியுள்ளார். இவர் எழுந்தருளியுள்ள இடம் 10 1/2 சதுர அடி. இவர் வாகன மண்டபத்திற்குப் புறப்படும் சமயம் இவர் திருப்பாதங்களை நால்வர் தாங்கிவருவாராம். இவரது இருப்பிடம்விட்டு வெளிவந்ததும் மூலைக்கு ஒருவராக மேலும் நால்வர். இவ்விதம் 16 பேர்கள் தாங்கிவர படிகளில் இறங்கும் தறுவாயில் பலபேர்கள் தாங்க இந்நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாக அமையும். இந்தக் கருடன் மீது எம்பெருமான் திருவீதி கண்டருள்வது நாச்சியார் கோவில் கருட சேவை எனப் பெரும் புகழ்பெற்றதாகும், பெரிய திருவடி தரிசனம் என்றும் இதனைக் குறிப்பிடுவர். இங்கு பெருமாளுக்குத் திருவாராதனம் முடிந்ததும் இவருக்கு 6 வேளைக்கு அமுதகலசம் ஊட்டப்படுகிறது. அமுத கலசம் எனப்படும் இந்த மோதகம் (கொழுக்கட்டை) இவருக்கு மிகவும் பிரியமானதாகும். எனவே இவரை மோதக மோதர் என்றும் சொல்வர். பக்தியோடு இவரிடம் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள் யாவும் இங்கு அப்படியே நிறைவேறி விடுகிறதென்பது கண்கூடான நிகழ்ச்சியாகும். 8. திருமங்கையாழ்வாரால் மட்டும் பெரிய திருமொழியில் 100 பாசுரங்களால் மங்களாசாசனம். நூற்றுக்கும் அதிகமான பாசுரங்களை திருமங்கையாழ்வார் அள்ளிப் பொழிந்தது இவர் ஒருவருக்கு மட்டும்தான். பெரிய திருமொழி மட்டுமின்றி, திருநெடுந்தாண்டகத்திலும் பெரிய திருமடல், சிறிய திருமடலிலும் இத்தலத்தினை மங்களாசாசனம் |