பக்கம் எண் :

113

செய்துள்ளார். இத்தலத்தோடும் இப்பெருமானோடும் திருமங்கைக்கு உள்ள
சம்பந்தத்தை விவரித்து தனிப்பெரும் நூலொன்றை யாத்துவிடலாம்.

     9. திருமங்கையாழ்வார் நீலன் என்ற பெயரில் சோழ மன்னனின்
படைத்தளபதியாயிருந்தார் (கப்பம் கட்டும் குறுநில மன்னனாக இருந்தார்
என்னும் ஒரு கருத்தும் உண்டு) அப்போது திருவெள்ளக் குளத்தில்
குமுதமலர் கொய்து செல்ல வந்த தேவ மகளான பெண்ணொருத்தி குமுத
மலரைக் கொய்து செல்ல வேண்டிய குறிப்பிட்ட நேரம் கடந்து விட்டபடியால்,
விண்ணுக்கு செல்ல முடியாது. திருவெள்ளக் குளத்திலேயே நின்று பூவுலகில்
வாழும் தன்மை பெற்றாள். பேரழகு பொலிந்த தெய்வ நங்கையான இவள்
குமுத மலருடன் நின்றதால் குமுதவல்லி எனப்பட்டாள். இந்நங்கையைப்
பற்றிச் செவி மடுத்த திருமங்கையாழ்வார் குமுதவல்லியைப் பெண் கேட்டு
வந்தார்.

     நான் வைணவ இலச்சிணைகளைத் தாங்கி வைணவ லட்சணத்துடன்
திகழும் ஒருவனுக்கு மாலையிடுவேன். எனவே நீர் வைணவ இலச்சிணை
தரித்தே வரவேண்டுமெனக் கூற திருமங்கையாழ்வார் திருநறையூர் நம்பியிடம்
தமக்கு வைணவ அடையாளமிட வேண்டுமென்று கேட்க வைணவ
லட்சணமான பஞ்ச ஸமஸ்காரங்களை இப்பெருமாளே திருமங்கைக்கு
செய்வித்தார்.

     பஞ்ச ஸமஸ்காரம் என்பது வைணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமான
கொள்கையாகும். ஒரு தூய வைணவன் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து
நிலைகளாகும். பஞ்ச ஸமஸ்காரம் என்பது யாவதோ வெனின், ஒரு சீடன்
ஆச்சார்யனிடம்

     1) 12 திருமண்கள் இட்டுக் கொள்ள வகை பெறுதல் அதாவது சரீரத்தில்
12 திருநாமங்களை எங்கெங்கு இடுவது ஒவ்வோர் திருமண் இட்டுக்
கொள்ளும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் அம்மந்திரத்தை உச்சரிக்கும்
விதம்

     2) புது தாஸ்ய நாமம் தரித்துக் கொள்ளல், அடியார்களின் பெயர்களை
தமக்கு இட்டுக் கொள்ளல்.

     அதாவது பெற்றவர்கள் இட்டபெயர் எதுவாயிருந்த போதும் ஒருவன்
வைணவனாக மாறும்