பக்கம் எண் :

114

பொழுது (விஷ்ணுக்கு அடியவன் ஆகும் போது) அவ்வெம்பெருமானின் திரு
நாமங்களையோ அல்லது அவனடியார்களின் பெயர்களையோ வைத்துக்
கொள்வது (நீலன், திருமங்கை ஆகிறார்).

     3) வலது புஜத்தில் (தீயிற் பொலிந்த) சக்கரத்தையும் இடது புஜத்தில்
தீயிற்பொலிந்த சங்கினையும் இட்டுக் கொள்ளல்.

     அதாவது விஷ்ணு வலது கரத்தில் சக்கரத்தையும், இடது கரத்தில்
சங்கினையும் கொண்டு திகழ்கிறார். விஷ்ணுவின் இந்த இரண்டு
சின்னங்களையும் இம்முறைப்படியே தமது வலது மற்றும் இடது தோள்களில்
தாங்கிக் கொள்ளுதல் (அடையாளமிட்டுக் கொள்தல்).

     4) தினந்தோறும் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்தல். அதாவது
தினந்தோறும் ஏதாவது ஒரு பிரசாதம் செய்து தூய மனதுடன் அதை
எம்பெருமானுக்குப் படைத்து, முறைப்படியான பூசை செய்து அதன்பின் தான்
சாப்பிடுதல்.

     5) திருமந்திரம் என்னும் நாராயண மந்திரத்தை உணர்ந்து உரைக்கும்
ஆற்றல் பெறல்.

     அதாவது “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை பொருளுணர்ந்து
உச்சரிக்கும் முறை.

     இவ்வைந்து வைணவ இலச்சணங்களை (அடையாளங்களை) இட்டுக்
கொள்ளும் சடங்கிற்கு பஞ்ச ஸமஸ்காரம் என்பது பொருள்.

     திருநறையூர் நம்பியே இதை திருமங்கையாழ்வாருக்கு செய்து வித்து
அவருக்கு ஆச்சார்யரானார். 108 திவ்யதேசங்களில் வேறெந்தப் பெருமாளும்
யாருக்கும் பஞ்ச ஸமஸ்காரம் செய்ததில்லை.

     திருநறையூர் நம்பியை உற்று நோக்கினால் அவர் சற்றே முன்வந்து
பஞ்ச ஸமஸ்காரம் செய்யும் தோற்றத்திலேயே இருப்பது போலத் தோன்றும்.
தானே ஆச்சார்யனாகவும், தானே சிஷ்யனாகவுமிருந்து பத்தி ரியில்
எம்பெருமானே திருமந்திரத்தை உலகிற்கு இட்டு அருளினான் என்பர். தானே
ஆசிரியனாகவும், தானே சீடனாகவும் இருந்ததால் பத்திரி எம்பெருமானை
முழுமையான ஆச்சார்ய லட்சணம் பெற்றவனென்று சொல்ல முடியாது.
ஆனால் நறையூரானோ தாம் முழு லட்சணம்