பக்கம் எண் :

115

பெற்ற ஆச்சார்யனாய் இருந்து நீலன் என்னும் பக்தனை சீடனாகக் கொண்டு
பஞ்ச ஸமஸ்காரம் செய்து திருமங்கையாழ்வாராக ஆக்குகிறார்.

     இதனால் எம்பெருமானின் 108 திவ்ய தேசங்களில் சிகரம் வைத்த
பெருமையை இத்தலம் பெறுகிறது.

     10) பஞ்ச ஸமஸ்காரம் செய்து கொண்ட பின்பு திருமங்கையாழ்வார்
மீண்டும் குமுதவல்லியை பெண்கேட்டு வந்த போது ஒருவருட காலத்திற்குத்
தினந்தோறும் ஆயிரம் ஸ்ரீவைணவர்கட்கு அமுது படைத்து ததியாராதனம்
செய்தால்தான் மணம் புரிந்து கொள்வேன் எனக் கூற இதற்கு மேல்
நிபந்தனை எதுவும் விதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்ட
திருமங்கையாழ்வார் ததியாராதனம் செய்யத் தொடங்கினார். (ததி என்றால்
அடியார்கள் என்பது பொருள். ஆராதனம் - என்பது அடியார்களுக்கு
அன்னமிடுவதைக் குறிக்கும்)

     கையிலிருந்த பணம் எல்லாம் தீர்ந்து போக ததியாராதனம் செய்ய
என்ன செய்வதென்ற நிலை வந்தபோது, சோழ மன்னனுக்காக வசூலித்த
கப்பத் தொகையை எல்லாம் ததியாராதனத்திற்கே செலவிட்டார். (இவர்
ததியாராதனம் நடத்திய இடம் மங்கை மடம் என்ற பெயரில் இன்றும் ஒரு
அழகிய ஊராகத் திகழ்கிறது)

     தனக்குச் செலுத்த வேண்டிய கப்பப் பணத்தை இவ்வாறு செலவு
செய்வதைக் கண்ட சோழன் திருமங்கையாழ்வாரைச் சிறைப் பிடித்தான். இந்த
நாச்சியார் கோவிலில் சிறை வைத்தான். மூன்று நாள் அன்ன ஆகாரமின்றி
இருந்தார். அன்றைய நாள் இரவில் எம்பெருமானிடம் மனம் உருகி
வேண்டிக்கொண்டார். திருமங்கையின் கனவில் வந்த நறையூரான் “காஞ்சிபுரம்
வேகவதி நதியில் நிதியை எடுத்து பகுதிப் பணத்தை செலுத்தி சிறைவீடு
செய்து கொள்ளும்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
 

     நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை
          நானடியேன் நறையூர் நின்ற நம்பியை
     கனவில் கண்டே னின்று ..............
          என்பது திருமங்கையாழ்வாரின் அமுத வாக்கு.

     கப்பம் கேட்க நான்காம் நாள் காலையில் சேவகர்கள் வந்து கேட்ட
போது “காஞ்சிபுரத்திற்கு வாரும் மாதனம் காட்டுகிறோம்”