தங்க வைத்து இறுதியில் பாண்டியன் மகள் உத்தமையை சோழராஜனின் மகன் சுசாங்கனுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் வரலாறுண்டு. பாண்டி நாட்டின் வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நிகழ்ச்சி ஒரு ஆய்வுக்குரிய விஷயமாகும். 9. வசு என்னும் மன்னன் (உபரிசரவஸு ) விஸ்வகர்மாவைக் கொண்டு இக்கோயிலை கட்டுவித்தான். அவன் புத்திரப் பேறு இன்மையால் இத்தலத்தில் அசுவமேதயாகம் செய்யயாக குண்டலியிலிருந்து தோன்றிய ஒரு புருஷன் இரண்டு செங்கழு நீர் மலர்களைத் தர அவற்றை முகர்ந்த வசுவன் மனைவி சுந்தரி அழகிய பெண்மகவைப் பெற்று பத்மினி (பதுமினி) என்று பெயரிட்டழைக்க, அப்பெண்தான் சௌரிராஜனையே மணவாளனாக ஏற்க வேண்டுமென்று, தவமியற்ற பெருமாளும் அவ்விதமே செய்து பத்மினியைத் தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார் என்பது பாத்ம புராணம் செப்பும் செய்தியாகும். 10. இக்கோவிலில் பூஜை புரிந்து வந்த சிரீதரன் என்னும் அர்ச்சகர் தான் காதல் கொண்ட கன்னிக்கு சூட்டிய மாலையை பெருமாளுக்குச் சூட்ட, இரவிலே சோழராஜன், சந்நிதிக்குவர, பெருமாளுக்குச் சூட்டிய மாலையை சிரீதரன் சோழனுக்கு அளிக்க, அதில் தலைமுடி ஒன்றிருக்க அரண்மனைக்கு சிரீதரனை அழைத்து காரணம் வினவ, பெருமாளுக்கு முடி வளர்ந்துள்ளதாக ஸ்ரீதரன் தெரிவிக்க, இதனைச் சோதிக்க மறு நாள் காலை சோழன் சந்நிதிக்கு வர பெருமாளின் தலையில் இரண்டு மூன்று கேசங்கள் நீண்டு வளர்ந்திருக்க, அவற்றை பிடித்து இழுக்குமாறு மன்னன் ஆணையிட, ஒரு கேசத்தையிழுக்க அதனின்றும் தெறித்த ரத்தத் துளிகள் மன்னனின் முகத்தில் தெறிக்க, இறைவன் தன் பக்தனைக் காப்பதற்கே இந்நாடக மாடினான் என்று உணர்ந்த சோழன் அர்ச்சகரின் பக்தியை மெச்சிய தோடு தானும் இப்பெருமானுக்கு அடிமையானான். இதன் காரணமாகத்தான் சௌரி ராஜன் என்னும் திருநாமம் இப்பெருமானுக்கு உண்டாயிற்றென்பர். 11. இவ்வூரில் வாழ்ந்த “முனைய தரையர்” என்பவர், பெருமாளுக்கு வேண்டிய திருப்பணிகளை செய்து உண்மை பக்தராயிலங்கி வந்தார். அவர் பெருமாளுக்கு |