மூலவர் லோகநாதன். சாம மாமேனிப் பெருமாள் என்பர். அதாவது ச்யாமள மேனி. (நீலமேகவண்ணன்) நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். தாயார் லோகநாயகி உற்சவர் தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி உடன் இடது கையை இடுப்பில் கொண்டு (கண்ணன் நிற்கும் கோலம் போல) தாயார் அரவிந்த நாயகி விமானம் உத்பல வதாக விமானம் தீர்த்தம் சிரவண புஷ்கரிணி, பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே சகல பாபங்களையும் போக்கவல்லதால் இப்பெயர் பெற்றது. இன்றும் காண்பதற்கு பேரெழில் வாய்ந்தது. ஸ்தல விருட்சம் மகிழ மரம் (வகுளம்) காட்சி கண்டவர்கள் பிரம்மன், கௌதமர், உபரிசரவசு, வசிட்டர், ப்ருகு, மாடரர், திருமங்கையாழ்வார். சிறப்புக்கள் 1. கிருஷ்ணாரண்யம் என்றழைக்கப்படும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களில் ஒன்றாகும். பஞ்ச கிருஷ்ண ஷேத்திரத்தின் விபரங்கீழ் வருமாறு. 1. திருக்கண்ணமங்கை 2. திருக்கண்ணபுரம் 3. கபிஸ்தலம் 4. திருக்கோவிலூர் 5. திருக்கண்ணங்குடி. 2. இதனை பஞ்ச பத்ரா என்றும் புராணங்கூறும். (ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம்) இவ்வைந்தினாலும் புகழ்பெற்ற இடமாதலால் பஞ்ச பத்ரா என்றாயிற்று. 3. திருக்கண்ணங்குடிக்கு அருகில் உள்ள மற்ற நான்கு ஸ்தலங்களையும் இதனுடன் சேர்த்து பஞ்ச நாராயணஸ்தலம் என்றும் வழங்குவர். அவைகளின் விபரம் வருமாறு. |