பக்கம் எண் :

143

     1. தெற்கில் - ஆபரணதாரி என்ற பதியில்
                ஆனந்த நாராயணன்
     2. தென்மேற்கில் - பெரிய ஆலத்தூர் வரத நாராயணன்
     3. தென்மேற்கில் - தேவூர் என்ற பதியில் தேவ நாராயணன்
     4. தென்மேற்கில் - கீவளுர் என்ற பகுதியில் யாதவ நாராயணன்
     5. தென்மேற்கில் - திருக்கண்ணங்குடி என்ற பதியில்
                     தாமோதர நாராயணன்.

     இவ்வைந்தும் சுமார் 6 கி.மீ சுற்றுவட்டாரத்திற்குள்ளாகவே
அமைந்துள்ளன.

     4. இங்கு தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்சவரும் ஒரே
ஜாடையிலிருப்பதுவேறெங்கும் காணமுடியாத அழகாகும்.

     5. மற்றெல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து
வணங்கும் நிலையில் உள்ள கருடாழ்வாரைத்தான் காணமுடியும். ஆனால்
இங்கு இரண்டு கைகளையுங் கட்டிக்கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக்
காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.

     6. இங்குள்ள அழகிய சிரவண புஷ்கரணியின் தெற்கு கரையில் உள்ள
கோவிலில் ஆதிப் பெருமாள் வீற்றிருந்த நிலையில் உள்ளார். இக்கோவிலைப்
பற்றிய ஆராய்ச்சி இன்றியமையாததாகும்.

     7. இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் “திருநீரணி விழா”
என்பது மிகச் சிறப்பான ஒன்றாகும். இந்த விழாவில் பெருமாள் விபூதி
அணிந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான்
நடைபெறும் அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம். உபரிசரவஸு
மன்னனுக்காக இவ்விதம் செய்யப்பட்டது. சைவ வைணவ ஒற்றுமைக்கு
இந்நிகழ்ச்சி மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

     8. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம்
செய்யப்பட்ட திவ்ய தேசம்.

     9. மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார்.