20. திருத்தஞ்சை மாமணிக் கோயில்
எம்பிராணெந்தை யென்னுடைச் சுற்றம் எனக்கர சென்னுடை வானாள் அம்பினா லரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுந்தவெம் மண்ணல் வம்புலாஞ் சோலைமாமதில் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் (953) பெரியதிருமொழி 1-1-6 |
வம்புலாஞ் சோலை மாமதில் சூழ், தஞ்சை மாமணிக் கோயிலில் உள்ள
எம்பிரான் தான் எனக்குத் தந்தை, அவனே என்னுடைய சுற்றம், எனக்கு
அரசு, என்னுடைய வாழ்நாளும் அவன்தான் அரக்க குலத்தை அம்பால்
அறுத்துக் குவித்த என் அண்ணலாகிய எம்பிரானின் நாமமாகிய நாராயணா
என்னும் நாமமே நான் கடைத்தேறக் கண்டுகொண்ட நாமம் என்று
திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம். தஞ்சை நகரைத் தாண்டியதும்
அமைந்துள்ள வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது.
வரலாறு.
இத்தலம் பற்றியும், இந்நகர் பற்றியும்பிரம்மாண்ட புராணம் விளக்குகிறது.
கிரேதாயுகத்தில் மது என்னும் அரசனது மரபில் தஞ்சகன், தண்டகன்,
கஜமுகன் என்னும் அசுரர் மூவர் பிறந்து சிவனைக் குறித்து கடுந்தவம் செய்ய
சிவன் தோன்றி என்ன வரவேண்டுமெனக் கேட்க அதற்கம்மூவரும் சாகா வரம்
வேண்டுமென்று கேட்டனர். சாகா வரமளிக்கும் வல்லமை திருமால்
ஒருவருக்கே உண்டு என்றும், என்னால் உங்கள் மூவருக்கும் மரணமில்லை
என்றும் சிவன் அருளி மறைந்தார்.
இதனால் இம்மூவரும் மிகவும் செருக்குற்று இந்திரலோகத்தையும்
அச்சுறுத்தி, முனிவர்களின் தவத்தையும் சிதைத்து கொடுமைகள்
புரிந்துவந்தனர். அப்போது பராசுரர் என்னும் முனிவர் இவ்விடத்தில் தவம்
செய்து வந்தார். அப்போது