பக்கம் எண் :

152

     7. “ஈயத்தாலாகாதோ இரும்பினா லாகாதோ
        பூயத்தால்மிக்க தொரு பூதத்தா லாகாதோ
       பித்தளை நற்செம்புகளா லாகாதோ - மாயப்
       பொன்னும் வேண்டுமோ மதித்துன்னை பண்ணுகைக்கு”

     என்று திருமங்கையாழ்வாரால் அறம்பாடி தங்கத்தாலான புத்தர்
சிலையை எம்பெருமானின் கைங்கர்யத்திற்காக கொண்டு வந்தது இந்த
நாகப்பட்டினத்திலிருந்துதான். இக்கோவிலிலிருந்து புத்தர் சிலை இருந்த
இடம் சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. நாகப்பட்டினம் கோர்ட்டுக்கு
சமீபத்தில் உள்ளது.

     8. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட திருத்தலம், ஒவ்வொரு பாடலிலும் “அச்சோ ஒருவர் அழகிய
வா” என்று இப்பெருமானின் அழகில் வியந்து மயங்கி மையல் கொண்டு
துருவன் ஆனந்தித்தது போல் மாந்தி மகிழ்கிறார் திருமங்கை. 10 பாக்களிலும்
இப்பெருமானின் பேரழகில் ஈடுபட்ட திருமங்கை கடைசிப் பாசுரத்தில்தான்
இத்தலத்தின் பெயரைக் குறிக்கிறார்.
 

     அன்னமும் கேழலும் மீனு மாய
     ஆதியை நாகை யழகியாரை
     கன்னிநன் மாமதின் மங்கை வேந்தன்
     காமறு சீர்கலி கன்றி... என்று குறிக்கிறார்.

     9. பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும், திருக்குருகைப் பெருமான்
கவிராயரும், முத்துசாமி தீட்சதரின் கிருதிகளும் இப்பெருமானின் பேரழகைப்
பாடிப் பரவுகின்றன.