பக்கம் எண் :

174

வரலாறு

     இத்தலம் பற்றிய விபரங்கள் பிரம்மாண்ட புராணத்தில் சிறிதளவே
கிடைக்கிறது. இரவில் நமக்கு ஒளிதரும் நாள் மதியாகிய சந்திரனுக்கு ஏற்பட்ட
சாபம் தீர்ந்தமையால் இங்குள்ள பெருமாளுக்கு நாண்மதியப்பெருமாள் என்ற
திருநாமம் ஏற்பட்டது. இதையேதான் வடவானரும் “சந்திரசாப ஹரப்”
பெருமாள் என்றழைத்தனர். விலை மதிப்பற்ற சங்கு ஒன்றை இப்பெருமாள்
ஏந்தியிருப்பதாலும் தலைச்சங்கானம் ஆயிற்றென்பர்.

     சங்ககாலத்தில் இப்பகுதி தலைச்சங்கானம் என வழங்கப்பட்டு
காலப்போக்கில் அது மருவி தலைச்சங்கமாயிற்று என்று தமிழாய்வாளர்
பகர்வர். இதுவே இப்போது தலைச்சங்காடு ஆயிற்று.

மூலவர்

     நாண்மதியப் பெருமாள், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்

     தலைச்சங்க நாச்சியார்

உற்சவர்

     வெண்சுடர்ப் பெருமாள்

தாயார்

     செங்கமலவல்லி

விமானம்

     சந்திர விமானம்

தீர்த்தம்

     சந்திர புஷ்கரணி

காட்சி கண்டவர்கள்

     சந்திரன், தேவப்பிருந்தங்கள்.

சிறப்புக்கள்.

     1. இவ்விடத்தில் எம்பெருமானுக்கு அமைந்துள்ள பெயர் மிகவும்
ஆழ்ந்து ரசிக்கத்தக்கதாகும். எம்பெருமானின் திருமுகத்தை தண் என்னும்
சந்திர ஒளிக்கு உவமானமாக ஆழ்வார்கள் பகர்ந்ததில்லையா.

     2. சந்திரனின் சாபந்தீர்த்ததால் பெருமானுக்கு இப்பெயர்
உண்டாயிற்றென்றாலும் எம்பெருமானின் திருமுக