காட்சி கண்டவர்கள் சந்திரன். சிறப்புக்கள் 1. இப்பகுதிக்கும் சுகந்தவனம் என்று பெயர் எனவே பெருமாளுக்கும் சுகந்தவன நாதன் என்ற திருநாமமும் உண்டானது. வடமொழி நூல்கள் சுகந்தவனநாதன் என்றே இப்பெருமானைக் குறிக்கின்றன. இப்பெயர்தான் தூயதமிழில் பரிமள ரெங்கன் என்றாயிற்று. 2. 4 புஜங்களுடன் கூடின இப்பெருமாளின் திருவடியருகில் கங்கைத் தாயாரும், சிரசருகில் காவிரித் தாயாரும் அமைந்துள்ளனர். ஐப்பசி மாதம் முழுதும் இங்கே விழாக் கோலமாக இருக்கும். சமுத்திரத்தில் காவிரி சங்கமமாகும் இடத்தில் நீராட இந்தியா முழுவதிலுமிருந்து இங்கு பக்தர்கள் வருவர். 3. இத்தலம் பலவித வேலைப்பாடுகளுடன் கூடின, அழகு பொருந்திய பெரிய சன்னதியாகும். கட்டிடக் கலை வல்லுனர்கட்கு இந்தக் கோவிலில் உள்ள பல அமைப்புக்கள் ஆராய்ச்சி மனப்பாண்மையைத் தூண்டத்தக்க வகையிலும் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ மிகவும் ரம்மியமான பகுதியில் அமைந்துள்ள ஸ்தலமாகும் இது. 4. திருமங்கை ஆழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. திருமங்கையும் பரிமள ரெங்கனும் திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு வந்தபோது பூஜைகள் முடிந்து கோவில் பூட்டப்பட்டுவிட்டது. தான் வருவதற்குள் இவன் கதவடைத்துக் கொண்டானே என்று கோபப்பட்ட திருமங்கை யாழ்வார் பெருமானை “வாழ்ந்தே போம் நீரே-என்று வசை வாழ்த்துக் கூறினார். அதாவது நமக்கு வேண்டிய ஒருவன் நமக்குத் தேவையான ஒரு பொருளை வைத்துக் கொண்டு நாம் அதைக் கேட்கும் போது வேண்டு மென்றே தரமுடியாது என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். அவன் நமக்கு மிகவும் வேண்டியவனாதலால். பரவாயில்லை அதை வைத்துக்கொண்டு “நீரே வாழ்ந்துபோம்” என்று கூறுவதில்லையா |