பெருமாள்களை கருடசேவையில் சேவிப்பது 11 திவ்ய தேசங்களுக்கு சென்று வந்ததற்கு ஒப்பாகும். ஆண்டுதோறும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய, திருமங்கையாழ்வார் இங்கு வருவதாக பக்தர்களின் நம்பிக்கை. திருநாங்கூர் சுற்றி உள்ள வயல் வெளிகளில் கருடசேவைக்கு (முதல்நாள் நள்ளிரவில்) காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று இரிய அந்த சத்தத்தை கேட்ட உடன் திருமங்கையாழ்வார் பிரேவேசித்துவிட்டதாக பக்தர்கள் கூத்தாடுவதும் திருமங்கையால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் மிகுந்த நெல் விளையும் என்று மக்கள் நம்புவதும் இப்பகுதியில் நிலவும் ஒரு திவ்யமான பக்தி நம்பிக்கையாகும். 11 ஸ்தலங்களின் வரலாற்றை இனி தனித்தனியாக காண்போம். |