தூக்கி திரிவிக்ரம கோலத்தில் நின்றருளியதாக புராண வரலாறு இவ்விதம் வரம் பெற்ற உரோமச முனிவர் பிரம்மனைநோக்கி “உன் ஆயுளும் என் ஒரு ரோமும் சரி” என்று கூறி அவனது கர்வத்தை அடக்கியதாகவும் கூறுவர். இக்கதைக் கருத்து தலைப்பில் கொடுத்துள்ள திருமங்கையின் பாசுரத்திலும் பொதிந்துள்ளதைக் காணலாம். புராணமும், பாடலீக வனம் நாம ஷேத்ர நாம உத்தமஷேத்ரா ரோமஸ்ய மஹாத்ம நகரி ..................................................... த்ரி விக்ரம முகம் வந்தே ஸதா ஸர்வாங்கம் சுந்தரம் என்று விவரித்துப் பேசும், இதன் எல்லைகளைக் கூட, உதகே பச்சிம பாகே காவிரி யாற்ச உத்ரதடே பூர்வேஸ்ய உத்ர ரங்கஸ்யே நூபுராயஸ்த தக்ஷ்ணே | (உதகே - கடல், பச்சிம் - மேற்கு, உத்ர - வடக்கு, பூர்வ - கிழக்கு) பாடலிக வனம் முடியும் இடத்தே மேற்கு எல்லை கடல் காவிரிக்கு வடக்கு, நூபுர கங்கையென்னும் கொள்ளிடத்திற்குத் தெற்கு, உத்திரரங்கம் என்னும் கோயிலுக்கு கிழக்கு என்று இதன் எல்லைகளையும் கோடிட்டு காட்டுகிறது. திரி விக்ரம அவதாரம் எடுத்து, தன் தாள்களால் உலகம் அளந்தமையால் இப்பெருமாளுக்கு தாள் + ஆளன் - தாளாளன் - தாடாளன் என்பதே திருநாமமாயிற்று. தாடாளப் பெருமானை வைத்து திரேதாயுகத்தில் கட்டப்பட்டிருந்த கோவில் இப்போதுள்ள இடத்தைவிட்டு சற்று தொலைவில் இருந்ததாகவும், அக்கோவில் வெள்ளப்பெருக்கால் சிதைபாடுற்ற பின்னே அதே பெருமாளை பிரதிட்டை செய்து இப்போதுள்ள இடத்தில் இத்தலம் எழுப்பப்பட்டதென்பர். ஆயினும் இக்கோவிலும் பழங்காலத்தே எந்த மன்னரால் அல்லது யாரால் கட்டப்பட்ட தென்று அறியுமாறில்லை. |