பக்கம் எண் :

192

மூலவர்

     திரி விக்ரமன், தாடாளன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய
நிலை.

தாயார்

     லோக நாயகி

உற்சவர்

     திரிவிக்ரமன், தாயார் மட்டவிழ்குழலி

தீர்த்தம்

     சங்க தீர்த்தம், சக்ர தீர்த்தம்

விமானம்

     புஷ்கலா வர்த்தம்

காட்சி கண்டவர்கள்

     உரோமசர், அஷ்டகோண மஹரிஷி

சிறப்புக்கள்

     1. மஹாபலிச் சக்ரவர்த்தி யாகம் செய்த இடத்தில் தானும் யாகம்
செய்யவிரும்பி விசுவாமித்திரன் ஒரு இடத்தை தெரிவு செய்ததாகவும், யாகம்
முடியும் வரை இடையூறுகளைக் களைய இராம இலக்குவர்களைத் துணைக்
கழைத்ததாகவும் வால்மீகி கூறுவார். அவ்விடத்திற்கு சித்தாஸ்ரமம் என்று
பெயர். அந்த சித்தாஸ்ரமம் என்பது இவ்விடம்தான் என்றும் சில
ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். இவர்களின் ஆதாரத்திற்குத் துணை நிற்பது
சித்தாஸ்ரமம் பாடலிகவனத்தில் அமைந்திருந்தது என்பதேயாகும். இருப்பினும்
இது ஆய்வுக்குரிய விஷயமேயன்றி முடிவான உண்மையாக ஏற்றுக்
கொள்ளுமாறில்லை.

     2. 108 திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை திருமங்கை
ஆழ்வார் விண்ணகரம் என்று குறிக்கின்றார். விண்ணகரம் என்றால் விண்ணில்
உள்ள பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம் என்பது பொருள். அந்த விண்
நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

     1. பரமேச்சுர விண்ணகரம்
     2. காழிச்சீ ராம விண்ணகரம்
     3. அரிமேய விண்ணகரம்
     4. வைகுந்த விண்ணகரம்