பக்கம் எண் :

193

     5. நந்திபுர விண்ணகரம்

     ஆனால் விண்ணகர் என்னும் சொல்லை நம்மாழ்வார்தான் முதன்
முதலாகக் கையாண்டுள்ளார். உப்பிலியப்பன் கோவிலை திருவிண்ணகர்
என்றே நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆண்டாளும் நாச்சியார்
திருமொழியில் மேகவிடு தூது பாசுரத்தில் இச்சொல்லைக் கையாண்டுள்ளார்.

     எம்பெருமானின் கைங்கர்யத்திற்காக பொருளைக் கொள்ளையடிக்க
முயன்ற திருமங்கையாழ்வார், பெருமாளை மங்களாசாசனம் செய்வதற்காக
இச்சொல்லையும் “இலக்கிய கொள்ளை” கொண்டுவிட்டார்.

     3. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம், மணவாள மாமுனிகளும் இரண்டுமுறை இங்கு
எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார்.

     4. ஒரு சமயம் இத்தலம் அழிவுற்றபோது உற்சவப் பெருமாளை மட்டும்
ஒரு மூதாட்டி தவிட்டுப் பானையில் வைத்துக் காத்து தினமும் திருவாராதனம்
முடித்து மீண்டும் தவிட்டுப் பானைக்குள்ளேயே வைத்துக் காத்துவந்தாள்.
திருமங்கை யாழ்வார் இவ்வூருக்கு வந்த சமயம் அந்த மூதாட்டியின் கனவில்
வந்த எம்பெருமான் தன்னை திருமங்கையிடம் ஒப்புவிக்குமாறு கூற
அவ்விதமே திருமங்கையிடம் கொடுக்க அவர் இங்கே பிரதிஷ்ளடை செய்தார்
என்பர். எனவே எம்பெருமானுக்கு “தவிட்டுப் பானைத் தாடாளன்” என்ற
பெயரும் உண்டு.

     திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வரும்போது ஞானசம்பந்தர்
வாதுக்கழைத்ததாகவும், அப்போதுதான் சுயமாக கவிபாட ஆராதன விக்ரக
வேண்டுமென்று திருமங்கையாழ்வார் தெரிவிக்க அவரது சீடர்கள்
மூதாட்டியிடம் தாடாள விக்ரகப் பெருமாள் இருப்பதை அறிந்து அதனைப்
பெற்று வந்து கொடுத்ததாகவும் கூறுவர்.

     5. ஆற்காடு நவாபின் ஆட்கள் இவ்வூருக்குத் தண்டாலுக்கு (வரி
வசூலுக்கு) வரும்போது தாடாளப் பெருமாளைத் தூக்கிச் சென்று நவாபின்
மகளிடம் கொடுக்க அவளும் படுக்கையறையிலும், உப்பரிகையிலும் வைத்து