பக்கம் எண் :

194

விளையாட, சீர்காழியில் உள்ள சிதம்பர படையாச்சி கனவிலும், அர்ச்சகரின்
கனவிலும் வந்து தாம் இருக்குமிடத்தை தெரிவிக்க, நாங்கள் வந்து எப்படி
உம்மைக் கொணர்வது என்று கேட்க காவல்கட்டுகளை கடந்து மதிற்சுவர்
அருகே வந்து வெண்ணெய் உண்ட தாடாளா வா, தவிட்டுப் பானைத்
தாடாளா வா என்று அழைக்க நான் வந்துவிடுவேன் என்று கூறினார்.
அவ்விதமே அவ்விருவரும் வரும்போது காவலர்கள் அனைவரும் தூங்கிக்
கொண்டிருக்க மதிற்சுவரை அடைந்து.

     தாடாளா வா தாடாளா வா
          வெண்ணெய் உண்ட தாடாளா வா
     தாடாளா வா தாடாளா வா
          தவிட்டுப் பானைத் தாடாளா வா என்று கூற

     உப்பரிகையில் நவாபின் மகள் அப்பெருமானைத் தூக்கிப்போட்டு
விளையாடிக்கொண்டிருக்க சரேலென்று சாளரத்தின் வழியாகப் பாய்ந்து
இவர்களின் கரத்தில் சேர, ஓட்டமும் நடையுமாகக் கொண்டுவந்து
அப்பெருமானை ஊர் சேர்த்ததாகக் கூறுவர்.

     இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் சிதம்பரப் படையாச்சியின்
வம்சத்தாருக்கு இக்கோவிலில் தனி மரியாதைகள் உண்டு.

     6) திருக்குறளின் 610ஆம் பாடல் இப்பெருமானையே குறிக்கின்றது
என்று திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஸ்ரீ.வி.வி.எஸ்.ஐயர்
குறிக்கின்றார்.
 

     மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
          தா(அ)யது எல்லாம் ஒருங்கு - குறள் 610
     தா அயது - தாவிய பரப்பு முழுவதும்
          அடி அளந்தான் - அடியால் உலகளந்த திருமால்

     திருமாலின் காலடிக்கீழ் உலகடங்கியது போல் சோம்பலற்ற மன்னனின்
கீழ் உலகு தங்கும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. உலகளக்கத் திருமால்
கொண்ட அவதாரம் த்ரிவிக்ரம அவதாரமாகும். இத்தலத்து எம்பெருமானின்
திருநாமமும் திருவிக்ரமனாகும்.

     Behold the prince that Knoweth not sloth: he will bring with his
away all that hath been measured by the steps of Trivikrama