பக்கம் எண் :

198

     பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
          அருட்குலாவு மயிலை தன்னில் அனலால் வெந்த
     அங்கத்தைப் பூம்பாவை யாக்கினோம் என்று
          இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
     இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே
                                      - என்றார்.

     பக்திச் சோலையிலே திளைத்து பாசுரங்களைத் தமிழன்னைக்கு
வாரித்தெளித்த இவ்விரு கவி வள்ளல்களும் கண நேரத்தில் (தாய்ப்பேச்சு,
தலைவிப்பேச்சு என்று) இரண்டு காதற்பூக்களைத் தமிழன்னைக்குச் சொருகி
விட்டுச்சென்று விட்டனர்.