பக்கம் எண் :

197

     படியுண்ட பெருமானைப் பறித்து பாடி
          பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
     கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று
          கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே

     என்பது ஞானசம்பந்தரின் தாய்ப்பேச்சு அதாவது தன்னைத் தாயாக
நினைத்துக் கொண்டு தன் மகளின் நிலை கூறுகிறார்.

     ஏ மங்கை மன்னா, பரம்பொருளாம் திருமாலை வழிப்பறி செய்தீர்.
உமது பவனியைக்காண என் மகள் ஒருநாள் வந்தபோது அவள்
உள்ளத்தையும் வழிப்பறி செய்தீர். இதுமுறையோ, எனது ஒரே மகள்
உள்ளமிழந்து உயிர் ஒன்றுடன் வருந்த நிற்கிறாளே, என்று கூறும் வகையில்
திருமங்கையாழ்வார் தனது உள்ளத்தையும் திருடிவிட்டதாய் (வழிப்பறி செய்து
விட்டதாய்) ஞானசம்பந்தர் கூறினார்.

     இதனைக் கேட்ட திருமங்கை, தன்னைத் தலைவியாகப் பாவித்துக்
கொண்டு, தலைவி படும் துயரத்தைச் சொல்லும்முகமாய் தலைவிப் பேச்சுப்
பேசுகிறார்.

     திருஞான சம்பந்தர் மயிலையில் அனலில் வெந்த ஒரு பெண்ணை
உயிர்ப்பித்துக் கொடுத்தார். இச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு
தலைவிப் பேச்சில் திருமங்கை கூறுகிறார்.

     ஞானசம்பந்தரே நானும் ஒரு பெண். பெண் என்றால் அபலை என்பர்
பெரியோர். நான் தங்களையே நினைந்து நினைந்து காணாக் காதலுற்று
பிரிவாற்றாமையால் வருந்தி நிலவொளி கூட அனலாக வேகும்படி நிலவில்
வெந்திருக்கிறேன். தாங்கள் மயிலாப்பூரில் அனலில் வெந்த ஒரு பெண்ணை
பிழைக்கச் செய்தீரே அது என்ன விந்தை, சித்து விளையாட்டால் கூட
இதனைச் செய்ய முடியுமன்றோ, ஆனால் தங்களைக் காண விரும்பி நிலவில்
வெந்த இந்தப் பெண்ணுடன் கூடி உயிர்ப்பித்தாலன்றோ தங்கள் பெருமை
நிலைக்கும் என்றார். இதோ அப்பாடல்
 

     வறுக்கை நுறுங்கணி சிதறிச் செந்தேன் பொங்கி
          மருக்கரையின் குளக்கரையில் மதகிலோடப்
     பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்