நாலுகவிப்பெருமாள் என்பது உமக்கே செல்லும், விருதோதிச் செல்லும், விருதோதிச் செல்லும் என்று கூறி கையிலிருந்த வேலினையும் பரிசாகக் கொடுத்து திருமங்கையின் கால்களுக்கு தண்டை அணிவித்து மகிழ்ந்தார். இதனால்தான் திருமங்கையாழ்வாரும் தாம் பிற ஸ்தலங்களைப் பாடிய பாக்களில் தமது ஒன்றிரண்டு பெயர்களை மட்டும் இணைத்துப் பாடி, இங்கே தம்மைத் தடுத்து தாம் வெற்றி கொண்டமையால் தனது 8 விருதுப் பெயர்களையும் கீழ்வரும் பாடலில் ஒருங்கே சொல்கிறார் செங்கமலத்து அயனனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை அங்கமலத் தடவயல் சூழ் ஆலி நாடன் அருள்மாரி அரட்ட முக்கி அடையார் சீயம் கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன் கொற்றவேற் பரகலான் கலியன் சொன்ன சங்கமுகத் தமிழ் மாலை பத்தும் வல்லார் தடங்கடல் சூழலுகுக்குத் தலைவர் தாமே - என்றார். | திருமங்கை இப்பாடலில் குறித்துள்ள தமது பட்டப் பெயர்கள் 1. ஆலிநாடன் 2. அருள்மாரி 3. அரட்டமுக்கி 4. அடையார் சீயம் 5. கொங்குமலர் குழலியர்வேள் 6. மங்கை வேந்தன் 7. பரகலான் 8. கலியன். 8) திருஞான சம்பந்தரும், திருமங்கையாழ்வாரும் சமகாலத்தவர்கள் என்பது வரலாறிந்தார் கூற்று. மதத்தால் இருவரும் வேறு பட்டவராயினும் மனத்தால் “கற்றானைக் கற்றோனே காமுறுவான்” என்பதற்கொப்ப ஒருவரையொருவர் சந்திக்கப் பேராவல் பூண்டவராயிருந்தனர் என்பதும் ஒருவருடன் ஒருவர் கன்னித்தமிழில் கலந்துரையாடக் காலங்கருதிக் காத்து இருந்தனர் என்பதும் கீழ்க்கண்ட இரண்டு பாக்களால் விளங்கும். கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக் கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம் அலையுண்டு குலைசிதறும் ஆலி நாடா | |