பக்கம் எண் :

2

சரண் புகுந்த எனக்கு வேறு புகலிடம் ஏது என்றும், “நின்னுழேனாய் யான்
பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவர்” என்ற ஆழ்வாரின்
திருவுளக்கருத்தின்படியும் பெருமாள் (விஷ்ணு) ஒருவனே சர்வ
தேவதைகளையும், சர்வ லோகங்களையும் படைத்தவன். அவனே சர்வ
தேவதாலயம், அவன் ஒருவனே தங்கள் தெய்வமென்று நம்பி அதனின்றும்
சற்றும் பிறழாது, மறந்தும் புறந்தொழா மாந்தராய் வாழ்கின்றனர். வைணவக்
கொள்கைகளைக் கொச்சைப்படுத்தாமல் அன்று தொட்டு இன்று வரை முறை
வழுவாது பின்பற்றுகின்றனர். தினந்தோறும் திருவாராதனம் (நித்ய பூஜை)
முடித்துவிட்டே உலகியல் கர்மங்களில் ஈடுபடுகின்றனர். வைணவ சமயக்
குறியீடான திருமண் தரித்துக் கொள்ளுதல், வைணவ அடியார்களின்
பெயர்களையே தமக்கும். தம் குடும்பத்தில் உள்ளார்கட்கும்
வைத்துக்கொள்ளுதல், வைணவ ஆச்சார்யர்கட்கு பகவானுக்குச் சமமான
அந்தஸ்து அளித்தல் போன்றவற்றில் சற்றும் தொய்வில்லா பாரம்பர்யத்தை
விடாது பின்பற்றுகின்றனர்.

சாதி சமய வேறுபாடற்றது

     வைணவம் சாதி, சமய வேறுபாடற்றது. எவனொருவன் தன்னை
விஷ்ணுவுக்கு அடிமை என்று நினைக்கிறானோ அவனே வைணவன்.
இக்கருத்துக்கு இயைந்தவர்கள் எக்குலத்தவராய் இருந்தாலும் அவர்கள்
வைணவர்களே. மதத்துவேசம் என்பது இங்கு இல்லை. இதற்கு எத்தனையோ
உதாரணங்கள் காட்டலாம். சிலவற்றை மட்டும் ஈண்டு காண்போம்.

     1) இராமானுஜரின் ஆச்சார்யர்களுள் ஒருவரான திருகச்சி நம்பிகள்
தாழ்குலத்தைச் சார்ந்தவர். அவர் உண்டுமுடித்த எச்சில் இலையில் உண்பதே
தமக்குப் பெரும்பாக்கியம் என்று கருதியவர் இராமானுஜர். ஆச்சார்ய
லட்சணத்தை உலகுணரச் செய்ததே வைணவம்தான்.

     2) ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டுச் சென்ற போது டில்லி
பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரங்கநாதன் விக்கிரகத்தின் மீது
பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்து அப்பெருமானிடமே
அடைக்கலமாகிவிட்டாள். பின்னால் அந்த விக்கிரகத்தை மீட்டுக் கொண்டு
வந்தபோது பாதுஷாவின் மகளும் பிரிவாற்றாமையால் பின்தொடர்ந்து வந்து
அந்த ரங்கநாதனிடமே ஐக்கியமாகிவிட அப்பெண்ணுக்குத் துலுக்க நாச்சியார்
என்றே பெயரிட்டு பெருமைபடுத்திப்