பக்கம் எண் :

200

விமானம்

     உச்சருங்க விமானம்

காட்சி கண்டவர்கள்

     உதங்க முனிவர்

சிறப்புக்கள்

     1) அடியவர்களின் பகைவர்களை அழிக்கும் பொருட்டே எம்பெருமான்
இங்கு எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். பகை நீக்கும் பரந்தாமன் என்றும்
சொல்லலாம். பகைவர்களை வெல்ல நினைப்பவர்கட்கு இப்பெருமாள் ஒரு
வரப்பிரசாதி.
 

     “திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழ்த்
          தீவினை போயகல அடியவர்கட் கென்றும்
     அருள் நடந்து இவ்வேழுலகத்தவர் பணிய”

     என்று திருமங்கையின் பாசுரத்திலேயே இவர் பகைவர்களை வெல்வதற்கு
அருள் பாலிப்பார் என்று கூறிச் செல்கிறார்.

     2) திருமங்கையாழ்வார் இத்தலத்திற்குத் தாம் உகந்தருளின பாக்களில் 8
பாசுரங்களில் எம்பெருமான் தேவர்கட்காக அமிர்தம் கடைந்து அசுரர்களை
வென்றதையும், மாவலியை அடக்கியதையும், இராவண சம்ஹாரத்தையும்,
பூதனையை மாய்த்ததையும் கூறி பகைவர்களை வெல்ல அருள் பாலிப்பவர்
இவரே என்று தலைக்கட்டுகிறார்.

     3) உதங்க முனிவர் என்பார் எம்பெருமானைக் குறித்து தவம் புரிந்து,
கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைச் சேவித்ததாக ஒரு வரலாறும்
உண்டு.

     4) தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும்
கருடசேவைக்கு இவரும் எழுந்தருள்வர்.

     5) திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம்.

     6) குடமாடு கூத்தர் என்பது இப்பெருமானின் திருநாமம். குடங்கள்
எடுத்து ஆடினானா அல்லது குடைகொண்டு ஆடினானா என்றொரு மயக்கு
இந்தக் “குடக்கூத்த” எனும் ஒரு சொல்லால் உண்டாகிறது. “குடங்கள் எடுத்து
ஏறவிட்டுக் கூத்தாட வல்லவன்” என்பது பெரியாழ்வாரின்