பக்கம் எண் :

201

திருவாக்கு. ஆனால் அவர் திருமகள் ஆண்டாளோ குன்றம் குடையாய்
எடுத்தாய்க் குணம் போற்றி என்று குன்றத்தை குடை பிடித்ததாகக் கூறுகிறார்.
இத்தலத்தைப் பொறுத்த மட்டில் குன்றைக் குடையாக எடுத்த கோவர்த்தன
நாதனே இங்கு எழுந்தருளியிருப்பதால் குடக்கூத்தர் அல்லது குடமாடு கூத்தர்
என்ற சொல் எதனைக் குறிக்கிறதென்பது ஆழ்பொருள் விஷயமாகும்.

     மலையாள திவ்ய தேசங்களில் திருக்கடித்தானம் என்பது ஒன்று. இங்கு
ஒரு காலத்தில் எம்பெருமானுக்கு நடைபெற்ற விழாக்களில் பெண்கள்
குடைபிடித்து நடனமாடும் நிகழ்ச்சி (குன்றத்தைக் குடையாக எடுத்ததை
நினைவு கூர்தலைப் போல) மிகச் சிறப்பாக நடைபெற்ற தென்றும் காலப்
போக்கில் இந்நிகழ்ச்சி கைவிடப்பட்டதென்றும் திருக்கடித்தானத்தில் கர்ண
பரம்பரைச் செய்தி. நம்மாழ்வார் திருக்கடித்தானத்திற்கு இட்டருளின
பாசுரத்தில் குடக்கூத்த எம்பெருமான் என்று கூறியிருப்பது இங்கு நடைபெற்ற
பெண்கள் ஆடும் குடைக் கூத்தினைப் பற்றியதாகும் என்று இங்குள்ளோர்
பொருள் கூறுவர்
 

     கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை
          கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்
     கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ, வைகுந்தம்
          கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே
                          - என்கிறார் நம்மாழ்வார்.

     வைகுந்தத்தில் குடங்கள் எடுத்தாடுவது இயல்பன்றே. அது நிகழ்ந்தது
கோகுலத்தில் தானே. வைகுந்தத்தில் கோபுரத்தையன்றோ குடையாக
கொண்டுள்ளான், பரமபதநாதன். எனவே குன்றத்தைக் குடையாக எடுத்த
நிகழ்ச்சியைத்தான் “குடக்கூத்த” என்று நம்மாழ்வார் நவில்கிறாராம். குடை
என்னும் தமிழ்ச்சொல் மலையாள மொழியில் “கொட” என்று வழங்கி
வருதலும் ஈண்டு ஆய்விற்குரியதாகும்.

     மேலும் நம்மாழ்வார் அர்ச்சாவதார மூர்த்திகளை மங்களாசாசனம் செய்த
பாக்களில்
 

     பரவி வானவரேத்த நின்ற பரமனைப்
          பரஞ்சோதியை குரவை கோத்த குழகனை
     மணிவண்ணனைக் குடக்கூத்தனை” என்றும்,