“எழுமைக்கும் எனதாவிக்கு இன்னமுதத்தினை எனதாறுயிர் கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக்கூத்தனை” | என்றும் அருளிய பாக்களில் பெரியாழ்வாரின் திருவாக்கு போல பிரித்து விளக்காமல் குடக்கூத்த, குடக்கூத்த என்று சொல்வதும் ஆய்தற்குரியதன்றோ, திருமங்கையாழ்வார் குடமாடு கூத்தன் என்ற சொல்லை இரண்டு தலங்கட்கு மங்களாசாசனம் செய்யும்போது இரு வேறுபட்ட பொருளில் எடுத்தாள்கிறார். 1) நந்திபுரவிண்ணகரத்தை மங்களாசாசனம் செய்யும்போது தாய்செற உளைந்து தயிருண்டு குட மாடு தட மார்வர் தகைசேர் ....................... என்று குடங்களில் தயிருண்டதை கூறுகிறார். | 2) இத்தலத்திற்கு அளித்த பாடலில், காமரூசீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன் குலவுமிடம் | என்று குன்றை குடையாய் பிடித்த காட்சியைக் கோடிட்டுக் காட்டுகிறார். எனவே இங்கிருப்பவனுக்கு கூறப்பட்ட குடமாடு கூத்தன் என்ற சொல் குடங்களையெடுத்து ஆடவல்ல கூத்தனல்ல “குன்றத்தைக் குடையாய் எடுத்த கோவிந்தன் தான்” என்பதில் சான்றோர் மருட்சி கொள்வாரா, மேலும் குடங்களெடுத் தேறவிட்டுக் கூத்தாடுவது லீலாவிநோதம் குன்றத்தைக் குடையாய்க் கொண்டு காப்பது அவன் வாத்ஸல்யம். பகைவனுக்கு அருளும் பண்பினனாக இங்கு எழுந்தருளியுள்ளவன் குடங்கள் எடுத்து ஆடுபவனன்று குடையாக குன்றத்தை எடுத்தவனே என்று தலைக்கட்டுவதற்கு தடையாது முளதோ, எனவே குடமாடு கூத்தன் என்று இங்கு குறிப்பிட்டது குன்றைக் குடையாகப் பிடித்ததைத்தான் குறிக்குமென்பது துணிவு. மேலும் பாடல் 207இல் குன்றத்தாய் என்றும், குடமாடு கூத்தன் என்றும் பிரித்துச் சொல்லப்பட்டுள்ளதும் இங்கு சீர்தூக்கிப் பார்க்க வல்லதொன்றாகும். குன்றத்தை குடையாக எடுத்து கோபாலர்களையும், |