ஆவினங்களையும் காத்தருளின கோவர்த்தன நாதனே இங்கு எழுந்தருளிய 11 பெருமான்களுள் ஒரவராக இருப்பதால் அந்த கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்த நிகழ்ச்சியே இங்கு மறைமுகமாக உணர்த்தப்பட்டுள்ளதால் குடமாடு கூத்தன் என்று திருமங்கையாழ்வார் குறிப்பது குடைபிடித்த நிகழ்ச்சியேயாகும். எனவே குடமாடு கூத்தன் என்று இங்கு எடுத்தாளப்பட்ட இச்சொல் குடைக் கூத்தினையே குறிக்கிறது என்பதில் யாதும் ஐயமில்லை. |