காட்சி கண்டவர்கள் உபரிசரவசு, உதங்கமஹாரிஷி சிறப்புக்கள் 1. பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம் 2. உபரிசரவசுவும், உத்தங்க மஹாரிஷி என்பாரும், இத்தலத்துப் பெருமானை வேண்டி மோட்சம் பெற்றனர் என்பது வரலாறு. 3. தனது நடனத்தை முடித்துக்கொண்டு 11 சிவரூபனான ருத்ரன் ஏகசிவனாக மாறி இந்த பரமபதநாதனின் அருள்வேண்டி நின்றதை வங்கமலி தடங்கடலுள் வானவர் களோடு மாமுனிவர் பலர்கூடி மாமலர்கள் தூவி எங்கள் தனி நாயகனே எமக்கருளெ யென்றும் ஈசனவன் மகிழ்ந்தினிது மருவியுரை கோவில் - என்ற திருமங்கையின் பாசுரத்தால் உணரலாம். | 4. திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப் பட்ட ஸ்தலம் 5. பரமபதத்தில் உள்ள விரஜா நதியே இங்கு விரஜை தீர்த்தமாக உள்ளது. 6. இப்பெருமானும் கருட சேவைக்கு வருவார். |