பக்கம் எண் :

259

     17) எம்பெருமானின் திருவடிப் பேற்றினையே நினைந்து தொழுது
திருப்பனந்தாழ்வான் வழிபட்ட இத்தலத்தை தூய்மையான
சிந்தனையுடையோராய்த் தொழுது இப்பெருமானுக்குத் தொண்டரானவர்கள்
தான் எமக்குத் தலைவராவர் என்கிறார் பிள்ளைப் பெருமாளைய்யங்கார்

     ‘அன்பணிந்த சிந்தையரா யாய்ந்த மலர் தூவி
          முன் பணிந்த நீரெமக்கு மூர்த்தியரே என்பர்
     எம்மயிந்தர புரத்தார்க் இன்றொண்ட ரானார்.
          தலைமயிந்தர புரத்தார் தான்.’