இதில், கிழக்கு நோக்கி நோக்கிய சயனம் 18 மேற்கு நோக்கி நோக்கிய சயனம் 3 தெற்கு நோக்கி நோக்கிய சயனம் 3 வடக்கு நோக்கி நோக்கிய சயனம் இல்லை. திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும். அவைகள் 1. ஜல சயனம் 2. தல சயனம் 3. புஜங்க சயனம் (சேஷசயனம்) 4. உத்தியோக சயனம் 5. வீர சயனம் 6. போக சயனம் 7. தர்ப்ப சயனம் 8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை) 9. மாணிக்க சயனம் 10. உத்தான சயனம் எந்தெந்த தலத்தில் எவ்வகையான சயனம் என்பதை இந்நூலில் அந்தந்த ஸ்தல வரலாற்றில் காணலாம். ஒரே சன்னிதியில் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலம் உண்டு. அவ்வாறு அமைந்த ஸ்தலங்கள் பல உண்டு. உதாரணத்திற்கு திருநீர்மலை, திருக்கோட்டியூர், மதுரை, கூடலழகர், திருவல்லிக்கேணி போன்றவைகளைக் கூறலாம். பொதுவாக திசையைக் குறிக்குமிடத்து அவைகள் மூலவர் நோக்கியுள்ள திசையினையே குறிப்பதாகும். மூலவர் எந்தெந்த ஸ்தலத்தில் எந்த திசை நோக்கியுள்ளாரோ அவ்வண்ணமே மேற்கண்ட கணக்கீடு கூறப்பட்டுள்ளது. அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள பெருமாள் ஒரு கரத்தை மேல் நோக்கி (அருளும் முகத்தான்) வைத்துள்ளதற்கு அபயஹஸ்தம் என்று பெயர். மற்றொரு கரத்தை கீழ்நோக்கி வைத்திருப்பதற்கு தன்னடிக் கீழ் சரணடைந்து உய்யுங்கள் என்பது பொருள். இனி இந்த நூலில் இந்த 108 திவ்ய தேசங்களின் வரலாற்றைக் காண்போம். |