நடுவுபட்டு நின்றமையால் நடுநாட்டான் என்னும் பெயர் வந்தது என்பர் 10) இங்கு தற்போதுள்ள எம்பெருமானார் ஜீயர் சுவாமிகளின் ஒரு பணி இராமானுஜரையே நினைவுபடுத்துகிறது. நாராயண மந்திரத்தை அனைவர்க்கும் உபதேசித்து அரிஜனங்களை திருக்குலத்தார் என்று பெயரிட்டு அழைத்து அவர்களை வைணவ அடியார்களாக்கினார் இராமானுஜர். அதுபோல் இந்த ஜீயர் சுவாமிகளும், ஆயிரக்கணக்கான அரிஜன சகோதரர்கட்கு தீட்சை அளிக்கிறார். அதாவது வருடாவருடம் தமது திருமாளிகையில் சமபந்தி போஜனம் அளிக்கிறார். சமபந்தி போஜனம் எப்போதோ தோன்றிவிட்டது பார்த்தீர்களா? 11) மிருகண்டு முனிவர்கட்கு திருவிக்ரம அவதாரத்தைக் காட்டிக் கொடுக்கும் முன்பு கிருஷ்ணனாக பகவான் எழுந்தருளியிருந்த சன்னதி தற்போது இத்தலத்தின் முன்புறத்திலேயே அமைந்துள்ளது. ஆதி சன்னதி இதுதான். சாளக்கிராமத் திருமேனியுடன் இவர் பொலிந்து தோன்றுகிறார். 12) இப்பெருமாளை, “ஆரானும் கற்பிப்பார் நாயகரே தானவனைக் காரார் திருமேனி காணும் அளவும் போய் சீரார் திருவேங்கடமே, திருக்கோவலூரே” என்று திருமங்கையாழ்வார் தமது திருமடலில் | இப்பெருமானின் சிறப்பினையெடுத்தியம்புகிறார். |