பக்கம் எண் :

286

கரைத்துவிட்டது போன்ற நிறமாகவல்லவா தெரிகிறது (கருமையும், பழுப்பும்,
நீலமும் கலந்தோடுகிறது)

     இப்பேற்பட்ட நிறத்தினூடே சரேலென மின்னல் வெளிச்சம் பாய்வது
போல நீலநிறமும் பாய்ந்தோடியிருக்கிறதே, அப்படியானால் முழுமையாக
இவன் என்ன நிறத்தினன் என்று மயங்குகிறார். தான் மங்களாசாசனம் செய்த
அர்ச்சாவதார மூர்த்திகளை எல்லாம் எண்ணிப் பார்க்கிறார். இவரைப் போல்
ஒருவரையும் பார்த்ததில்லையே, ஒருவரும் இவரைப் போலில்லையே என்று
எண்ணி யாரைய்யா நீர் என்பது போல் யாரிவர் என்று கேட்டார்.
பெருமாளும் இவரிடம் பேசுவதற்கு பிரியம் கொண்டாரல்லவா? தாம் கொண்ட
வடிவத்தையே பெயராக்கி அட்டபுயகரத்தான் என்றார்.

     அப்படியா விளக்கம் ஏதும் விவரிக்காமல் அட்டபுயக்கரத்தார்
என்கிறாரே நாமும் அதேபோல் மங்களாசாசனம் செய்வோமென
அட்டபுயக்கரத்தேன் என்றார்.

     இந்த அட்டபுயக்கரம் காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதியிலிருந்து
சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு
அருகில் அமைந்துள்ளது.

வரலாறு

     பண்டைப் புராணங்கள் பலவும் இத்தலம் பற்றிப் பேசுகின்றன.

     பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த எம்பெருமான் பலவாறாக
உதவி, பாதுகாத்துக் கொண்டிருக்க மேலும் அதனை நிலைகுலைக்க எண்ணிய
நாமகள் பயங்கர ரூபத்துடனான காளியைப் படைத்து அவளுடன் கொடிய
அரக்கர்களையும் அனுப்பினாள். காளியின் கொட்டத்தை அடக்கி உடன்வந்த
அரக்கர் கூட்டத்தை முறியடிக்க எம்பெருமான் 8 கரங்களுடன் தோன்றி
அரக்கர்களை அழித்து காளியை அடக்கினார். அதனால் அட்டபுயக்கரத்தோன்
ஆனார். வலப்புறம் நான்கு கைகள் இடப்புறம் நான்கு கைகள் என 8
கைகளுடன் நிற்கிறார். அட்டபுயகரத்தோனாக ஆகும் முன்பே (இவ்விடத்தில்
ஆதிகேசவப் பெருமாள் என்னும் பெயரில் பெருமாள் எழுந்தருளியிருந்ததாகவும் அவரே அட்ட புயக்கரமாக வந்தாரென்றும் ஒரு
வரலாறும் உண்டு)

மூலவர்

     ஆதிகேசவப் பெருமாள். கஜேந்திரவரதன் மேற்கு நோக்கி நின்ற
திருக்கோலம். (ஆழ்வார் மங்களாசாசனத்திற்குப் பிறகு அஷ்ட புயக்கரத்தான்
என்பதே பிரபல்யம்)