தாயார் அலர்மேல் மங்கை, பத்மாஸனி தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி விமானம் ககநாக்ருதி, சக்ராக்ருதி விமானமென்றும், வ்யோமாகர விமானமென்றும் பெயர்களுண்டு. காட்சி கண்டவர்கள் கஜேந்திரன், திருமங்கையாழ்வார். சிறப்புக்கள் 1) எட்டுக்கரங்களுடன் பெருமாள் எழுந்தருளியிருப்பது 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுந்தான். வலப்புறம் உள்ள 4 கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு, ஆகியவற்றையும் இடப்புறம் உள்ள நான்கு கரங்களில் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் போன்றவற்றைப் பெற்றுத் திகழ்கிறார். அஷ்டாச்சர ரூபன், அட்டாக்கர ரூபனாய் இருப்பது இங்கு மட்டுந்தான். 2) சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாள் காளியின் கொட்டத்தை இவ்விடத்தே அடக்கினார். இதற்கு ஆதாரம் தரத்தக்க வகையில் இச்சன்னதியின் அருகே கருங்காளியம்மன் கோவிலொன்றுள்ளது. 3) தொண்டை மண்டலத்து திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பரமபத வாயில் உள்ளது. 4) மகாசந்தன் என்னும் முனிவர் மஹாவிஷ்ணுவைக் குறித்து தவமிருந்தார். இவர் இந்திரனுக்கு எதிரி. தனது இந்திர பதவியைப் பெறுவதற்காகத்தான் இம்முனிவர் தவமிருக்கிறார் போலும் என்று நினைத்த இந்திரன் தேவலோக மாதர்களை (அப்ஸரஸ்களை) அனுப்ப முனிவர் அவர்களை வெறுத்தொதுக்கினார். எனவே இந்திரன் எப்படியும் இம்முனிவரின் தவத்தைக் கலைக்க வேண்டுமென்றெண்ணி யானை வடிவங்கொண்டு தன்னோடு பல யானைக் கூட்டங்களை அழைத்துக் கொண்டு இம்முனிவர் தவமிருக்கும் இடத்திற்கு வந்து காமப்புணர்ச்சி கொண்டு நிற்க இதைக் கண்ட முனிவர் சித்தம் கலங்கி தவவலிமையிழந்து தாமும் ஒரு யானையாக மாறினார். தம் நிலை மறந்து பெண்யானைகளுடன் இன்புற்று திரிந்தார். இவ்வாறே நாட்கள் பல நகர்ந்து |