பக்கம் எண் :

294

கொளியையும், பிராட்டியின் திருநாமமான மரகதவல்லி என்பதையும் இத்திவ்ய
தேசத்தின் திருநாமமான திருத்தண்கா என்பதையும் ஒரே வரியில்
முறைப்படுத்தி மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கை.

     7) திருவேங்கடத்து எம்பெருமானையே ஈண்டு கண்டதாக திருமங்கை
மங்களாசாசனம் செய்துள்ளார்.
 

     பொன்னை மாமணியை யணியார்ந்த தோர்
     மின்னை, வேங்கடத்துச்சியிற் கண்டு போய்
     என்னை யாளுடை யீசனை எம்பிரான்
     றன்னை, யாம் சென்று காண்டும் தன் காவிலே - 1849

     வேங்கடத்து உச்சியில் ஒரு ஜோதியைக் கண்டேன். பொன்னொத்த
சோதி உருக்கொண்ட என்னையாளும் அந்த எம்பிரான் தன்னைத் தண்

     காவில் சென்று கண்டேன் எனக்கூறி அணியார்ந்ததோர் மின்னை
என்னும் சொற் றொடரில் இப்பெருமானுக்குண்டான விளக்கொளியைப்
பிரகாசிக்கச் செய்கிறார்.

     8) மேற்சொன்ன தோடு மட்டுமன்றி,
 

   குறுங்குடியுள் நின்றானை, மூவுலகிற்கும் முதலானவனை
        அளவிட வியலா ஆராவமுதனை, அரங்கத்து அரவணையில்
   பள்ளி கொண்ட ஐ யனை, வெஃகாவில் துயில் அமர்ந்தானை
        வேங்கடத்து நின்றானை இந்த திருத்தண்காவிலே கண்டேன்

     என்று இத்தலத்தினை 108 திவ்யதேசங்களில் மிக முக்கியமான
ஸ்தலங்களுக்கு இணையாக்கி விட்டார் திருமங்கை.

     9) பிள்ளைப் பெருமாளய்யங்கார் தமது அஷ்ட பிரபந்தத்தில்,
 

     ஆட்பட்டேன் ஐ ம்பொறியால் ஆசைப்பட்டே னறிவும்
          கோட்பட்டு நாளும் குறை பட்டேன் - சேட்பட்ட
     வண்காவை வண்துவரை வைத்து விளக்கொளிக்குத்
          தண்காவைச் சேர்ந்தான் தனக்கு.