மூலவர் இல்லை. திருநாமம் நீரகத்தான் உற்சவர் ஜெகதீஸ்வரப்பெருமாள். தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார் நிலமங்கை வல்லி தீர்த்தம் அக்ரூர தீர்த்தம் விமானம் ஜெகதீஸ்வர விமானம் காட்சி கண்டவர்கள் அக்ரூரர் சிறப்புக்கள் 1) திருஊரகத் தலத்தின் 2வது பிரகாரத்தில் உள்ள அழகு பொருந்திய 16 கால் மண்டபத்தில் நீரகத்தான் சன்னதி அமைந்துள்ளது. 2) திருமங்கையாழ்வாரால் மட்டும் தலைப்பிலிட்ட பாடலால் மங்களாசாசனம். 3) நீர்வண்ணரூபனாகதிருநீர் மலையில் திருமங்கையாழ்வார் பெருமாளைச்சேவித்தார். அதன் பின்பு இங்குதான் நீரகத்தாய் என்று மங்களாசாசனம் செய்கிறார். 4) தமது நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியில் பிள்ளைப் பெருமாளையங்கார், ஆலத்திலை சேர்ந்து ஆழியுலகை உட்புகுந்த காலத்தில் எவ்வகை நீ காட்டினாய் - ஞாலத்துள் நீரகத்தாய் நின்னடியேன் நெஞ்சகத்தாய் நீண்மறையின் வேரகத்தாய் வேதியர்க்கு மீண்டு. | இப்பாடலை உற்று நோக்கினால் பிரபஞ்ச பிரளயத்தின் போது ஆலமரத்திலை மேல் ஒரு பாலகனாய் கண் வளர்ந்த திருக்கோலத்தை இத்தலத்தில் எம்பெருமான் காட்டியருளினார் போலும். அதனால்தான் நீரையே தனது |