பக்கம் எண் :

304

ஆ)  இசைந்த வரவமும் வெற்புங் - கடலும்
          பசைந்தங்கு அமுது படுப்ப - அசைந்து
     கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில்
          கிடந்திருந்து நின்றதுவு மங்கு - 2345
                      என்று பேயாழ்வார் உரைப்பதும்.

இ)   குன்றிருந்த மாட நீடும் பாடகத்தும் ஊரகத்தும்
     நின்றிருந்து வெஃகனைக் கிடந்ததென்ன நீர்மையே - 814

     என்று திருச்சந்த விருத்தத்தில் திருமழிசையாழ்வாரும் கூறியிருப்பதில்
108இல் உள்ள பிற ஸ்தலங்களை மூன்று திருக்கோலங்கட்கும் சுட்டவில்லை.

     ஈ) நின்றவாறும் அன்றியும் இருந்தவாறும் கிடந்தவாறும்
நினைப்பரியன. ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள் -
(திருவாய்மொழி 5.10.6)

     என்ற நம்மாழ்வாரின் மங்களாசாசனத்திற்கு

     திருவூரகத்தில் நின்றபடியும், திருப்பாடகத்திலே இருந்தபடியும்
திருவெஃகாவிலே கிடந்த படியுமாதல் - என்று ஈடு வ்யாக்யானம்
சுட்டியிருப்பதும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

     எனவே ஆழ்வார்கள் காலத்திலும், அதற்கு முந்திய தொன்மைக்
காலத்திலும் நின்றிருந்த கிடந்த திருக்கோலமென்றாலே அது மேற்படி மூன்று
தலங்களையே குறிக்கும் என்பதில் ஐயமில்லை.

     மிகப் பிற்காலத்திலேதான் நின்ற திருக்கோலத்திற்கும் அமர்ந்த, கிடந்த
திருக்கோலங்கட்கும் 108இல் பிற ஸ்தலங்கள் பிரசித்தி பெற்றன வென்று
சொன்னால் அது மிகையல்ல.

     காஞ்சி மண்ணில் முத்தீபம் போல் இலங்கும் இத்தலங்கள் தொண்டை
மண்டலத்திற்கே தனிப்புகழ் ஏற்றுத் தந்தன வென்பதும் மறுக்க
முடியாததாகும்.

     4) ஸ்ரீஇராமானுஜரிடம் வாதப்போரிலே தோற்றுப்போன யக்ஞ மூர்த்தி
என்னும் அத்வைதி ஸ்ரீஇராமானுஜரின் உண்மை சொரூபம் தெரிந்து
அவரிடமே சரணாகதியாகி அவரிடம் சீடரானார். அவருடைய பெயரை
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று இராமானுஜர் மாற்றி அவரை
விஷ்ணுவின் தொண்டராக்கி விஷ்ணு