பக்கம் எண் :

305

கைங்கர்யம் செய்ய வைத்தார். இந்த அருளாளப் பெருமாள் ஜீவித்திருந்தது
இந்த திவ்ய தேசத்தில்தான். இங்கு அவருக்குத் தனி சன்னதியுண்டு.

     5) பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்,
திருமங்கையாழ்வார் ஆகிய நால்வரால் 6 பாசுரங்களில் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம்.

     6) மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளி மங்களாசாசனம்
செய்துள்ளனர்.

     7) நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில், பிள்ளைப் பெருமாளையங்கார்
 

     தவம் புரிந்த சேதனரைச் சந்திரன் ஆதித்தன்
     சிவன் பிரம்மனிந்திரனா செய்கை - உவந்து
     திருப்பாடக மருவுங் செங்கண் மால் தன் மார்
     பிருப்பாடக உரையாலே

     யார் எந்தப் பயனைக் கருதி தவம் செய்யினும் அந்தப் பயனாகவே
எம்பெருமான் அவர்கட்கு வருகிறான். சந்திரன், சூரியன், சிவன், பிரம்மன்,
இந்திரன் என்று அவரவர்களின் எண்ணங்கட்கேற்ப நியமித்து அவர்களின்
தவத்திற்கு மகிழ்ந்து பயனளிக்கிறான். அத்தகையோன்தான் இந்த
பாடகத்துள்ளான். (ஜெனமேஜெய மகாராசனுக்கும் அவர் விரும்பியவாறே
வந்து காட்சி தந்தான்)

     8) எம்பெருமானுக்கு எத்தனையோ திருப்பெயர்கள் இருக்க பக்தர்களின்
கைங்கர்யத்திற்காகவே சென்ற பாண்டவ தூதன் என்ற தனது கைங்கர்ய
திருநாமத்தையே கொண்டு இத்தலத்தில் இருப்பது ஒரு தனிப்பெருஞ்
சிறப்பாகும். இவ்விடத்தில் பிராட்டியும் கம்பீரமாகத் திகழும் பாண்டவதூதரின்
திருமார்பை விட்டகலாது கேட் போருக்குப் பயனளிக்க (புருஷாகாரமாக)
சிபாரிசு செய்து எழுந்தருளியுள்ளார். எண்ணரும் சிறப்புக் கொண்டதன்றோ
இத்தனித்துவம்.