இவ்விதம் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒருசேர அருளிய ஸ்தலம் உண்டென்றால் அது இது ஒன்றுதான். 3) (காஞ்சியில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் அமைந்துள்ள இந்த திவ்ய தேசத்தில் சிவன் கோவில் குருக்களே பூஜை செய்து தீர்த்தம் கொடுக்கின்றார். தமிழ்நாட்டிலுள்ள திவ்ய தேசங்களில் சிவனடியார்களால் பூஜை செய்யப்படும் பெருமாள் உண்டென்றால் அது இவர் ஒருவர் தான்.) 4) புராணங்களில் நேர் ஒருவரில்லா வல்லி என்று குறிக்கப்பட்ட இந்தப் பிராட்டிக்கு நிலாத்திங்கள் துண்டத்தானின் திவ்ய தேசத்தில் தனிச் சன்னதி உள்ளதாக அறிய முடிகிறது. இங்கு தற்போது நாச்சியாரில்லை. புராணங்கூறும் புஷ்கரணியில்லை. 5) திருமங்கையாழ்வாரால் மட்டும் தலைப்பிலிட்ட பாடலால் மங்களாசாசனம். 6) நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில், “மீண்டும் தெளியார்கள் மேதினயினோர் நின்னடிப்பூ பாண்டரங்க மாடிப் படர் சடை மேல் - தீண்டிக் கலாத்திங்கள் துண்டத்தான் மீதிருப்பக் கண்டு நிலாத்திங்கள் துண்டத்தானே” | நிலாத்திங்கள் துண்டத்தானாக எழுந்தருளியுள்ள எம்பெருமானே, அர்ஜு னன் நின்னை பூசித்து நின் திருவடிகளில் சமர்ப்பித்த மலர்களை திருவடி பாக்கியத்தின் மேன்மை கருதி. பதினொன்று கூத்துக்களில் ஒன்றான பாண்டரங்கம் என்னும் கூத்தாடும் சிவன் தன் தலையில் ஏற்றுக் கொண்டான். இதை ஆழ்வார்கள் பலரும் அருளியுள்ளனர். இவ்விதம் கலாத்திங்கள் (கலை-நிலவு) கலாத்திங்கள் - வளரும் திங்கள் (கலை என்றாலே வளர்தல் என்ற ஒரு பொருளும் உண்டு) சூடிய இவனது தலைமேல் தனது பாத பூஜைப் புஷ்பங்கள் இருந்தும் இந்த மேதினயோர் நீயே பரம்பொருள் என்று நின் திருவடிப் பெருமையை தெளியாமல் உள்ளார்களே என்று பாடி இருப்பது இத்தல வரலாற்றோடு மிகவும் சிந்தித்துப் பார்க்கத் தக்கதாகும். |