பார்வதியின் வேண்டுகோளின் படி பெருமாள் குளிர்ந்த கிரணங்களை வழங்கிக் கொண்டே இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம். மூலவர் நிலாத்திங்கள் துண்டத்தான். சந்திரசூடப் பெருமாள் என்பது வடவாணர் மொழிவர். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார் நேரொருவர் இல்லா வல்லியென்றும், நிலாத்திங்கள் துண்டத்தாயார் என்னும் திருநாமம். தீர்த்தம் சந்திர புஷ்கரணி விமானம் புருஷ ஷீக்த விமானம் (ஆர்ய விமானம்) காட்சி கண்டவர்கள் சிவன், பார்வதி சிறப்புக்கள் 1) இப்பெருமாள் பார்ப்பதற்கு பேரழகு பொருந்தியவர். குளிர்ந்த கிரணங்களை வீசிக்கொண்டே இருக்கிறார் என்பதை இவர் முன்நின்ற சிறிது நேரத்திலேயே உணரமுடிகிறது. அவ்வளவு ரம்யமான தேஜஸ் பொருந்திய தண் என்ற நிலவுமுகன். பெயருக்கேற்ற பொருத்தத்துடன் பேரழகு பொலிய நிற்கிறார். 2) மாமரத்தை தழைக்கச் செய்த பிறகு பார்வதி மீண்டும் யாகத்தை துவக்க இதனால் மேலும் சினந்த சிவன் தனது தலையில் உள்ள கங்கையை ஏவினார் தமக்கையாயிற்றே என்றெண்ணி தன்யாகத்திற்கு ஊறுவிளைவிக்க வேண்டாமென்று வேகமாக வந்த கங்கையை வேண்டினாள். கங்கை அதைப் பொருட்படுத்தவில்லை. பார்வதி தனது பக்தி மேலீட்டால் மணலினால் லிங்கம் செய்து தவமிருந்தாள். கங்கையால் அந்த லிங்கத்தைக் கரைக்க முடியவில்லை. இதைக் கண்ட பார்வதி மிக்க சந்தோஷத்துடன் அந்த லிங்கத்தை ஆலிங்கனம் செய்து கொண்டாள். இவ்விருவருக்கும் நிலாத்திங்கள் துண்டத்தான் அருள்பாலித்தார். |