ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் அமைந்திருந்தன என்று பார்த்த மாத்திரத்திலேயே ஊகிக்க முடிகிறது. பின்னொரு காலத்தில் சுற்று மதில் எழுப்பப்பட்ட போது இரண்டுக்கும் சேர்த்து தற்போதுள்ள மாதிரி பெரிய மதிலை அமைத்திருக்கின்றனர் என்பது ஊகிக்க முடிகிறது. பெரிய மதிலாகச்சுற்றி வளைத்து இரண்டு சன்னதிகளையும் ஒரு பெரும் கோட்டைக்குள் வைத்தது மாதிரி அமைத்துவிட்டனர். இந்த மதிலும் திருமங்கையாழ்வாரின் காலத்திற்குப் பின்னால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் தில்லை கோவிந்த ராஜன் சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குள் உள்ளான் என்று திருமங்கையாழ்வார் ஓரிடத்திலும் சொல்லவில்லை. வைணவத்திருத்தலங்களில் சிவன் (தேவதாந்திரத்திற்கும் எம்பெருமான் இடங்கொடுக்கிற பண்பை) இருப்பதை திருமங்கையாழ்வார் சுட்டுகிறார். உதாரணமாக பாண்டிநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் சிவனுக்குத்தனி சன்னதி உள்ளது. இதனைத் திருமங்கையாழ்வார் அக்கும் புலியின் அதளும் உடையான் அவரொடு பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர் போலும் - 1798 | இவ்விதம் அடையாளங்காட்டும் திருமங்கையாழ்வார் மேற்சொன்ன ஸ்தலங்கள் சைவதலங்கட்கு உள்ளேயோ அன்றி வெகு அருகாமையிலோ இருந்ததாக ஓரிடத்தும் கூறினாரில்லை. எனவே இத்தலங்கள் தனித்து மற்ற வைணவத் தலங்களைப் போலவே வைணவலட்சணத்தோடு திகழ்ந்திருக்க வேண்டும். காலத்தின் போக்கில் இவ்விதம் ஏற்பட்டிருக்கலாம். எனவே இத்தலங்களின் உண்மையான இருப்பிடம் யாது, அதில் குறிப்பிட்டுள்ள புஷ்கரணி மற்றும் பிறவெல்லாம் எங்கிருந்தனவென்பது ஆய்ந்து காண்டற்குரியனவாகும். வரலாறு ஒரு சமயம் பார்வதிக்கும், பரமசிவனுக்கும் ஒரு போட்டி ஏற்பட்டு பார்வதி இவ்விடத்தில் ஒரு மாமரத்தின் கீழ் தவம் செய்ய அத்தவத்தை சோதிக்க எண்ணி சிவன் மாமரத்தை நெற்றிக் கண்ணால் தீ ஜ்வாலைகளால் எரிக்க பார்வதி திருமாலைப் பிரார்த்தித்தாள். சங்கு சக்ரதாரியாகத் தோன்றிய திருமால் அம்ருத கிரணங்களால் மாமரத்தை தழைப்பிக்கச் செய்ய பார்வதியின் தாபம் தீர்ந்து தவத்தைத் தொடர்ந்தாள். பார்வதியின் தாபம் தீர்க்கப்பட்டதால் (துண்டிக்கப்பட்டதால்) இப்பெருமானுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயருண்டாயிற்று. நிலவின் குளிர்ந்த கிரணங்களால் பார்வதியின் யாகத்திற்குண்டான தடை துண்டிக்கப்பட்டதால் இப்பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர் ஏற்பட்டதென்பர். |