சிறப்புக்கள் 1. திருவூரகம் சன்னதிக்குள் புஷ்கல விமானத்தில் எழுந்தருளியுள்ள இந்தக்கார் வானத்தான் பெயரே மிகவும் இனிக்கும் தமிழ்ச் சொல்லாகும். அதாவது கார்மேகம் சூழ்ந்த வானத்திற்குள் வானுலகில் உள்ள மாயவனான கள்வனே இங்கு எழுந்தருளியுள்ளான் என்பது பொருளாகும். எனவே இத்தலம் பரமபதத்திற்கு சமமான தலம் என்று சொல்லலாம். 2. திருமங்கையாழ்வாரால் மட்டும் தலைப்பிலிட்ட பாடலால் சொற்றொடர் மங்களாசாசனம். 3. நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியிலும், தாலேலோ வென்றாய்ச்சி தாலாட்டித் தன்முலைப்பா லாலே யெவ்வாறு பசியாற்றினள் முன் - மாலேபூங் கார்வானத் துள்ளாய் கடலோடும் வெற்போடும் பார்வான முண்டாய் நீ பண்டு. | என்று இந்தக் கார்வானத்து எம்பெருமானுக்கு பரமபதநாதனின் சம்பந்தத்தைக் தருவித்திருப்பதும் ஈண்டு சிந்திக்கத் தக்கதாகும். |