பக்கம் எண் :

331

     உண்டியான் சாபந்தீர்த்த
     ஒருவனூர் உலகமேத்தும்
          கண்டியூர் (2050)

     என்பதில் கண்டியூர் என்ற சொற்றொடராலும் தெளிவாகக் குறிக்கிறார்.

     இதேபோல் திருமழிசையாழ்வாரும்

     கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
     மாற்றமும் சாரா வகையறிந்தேன் - ஆற்றங்
     கரை கிடக்கும் கண்ணன் - 243

     என்று சுட்டியுள்ளார்.

    
இதில் ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்ற சொல்லாலே
கவித்தலத்தை மங்களாசாசனம் செய்கிறார். இங்கு பெருமாளின் திருநாமத்தால்
மட்டும் மங்களாசாசனம் அதாவது ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்
கவித்தலத்தான் என்று மங்களாசாசனம் செய்கிறார்.

     இதுபோன்றே மற்ற ஆழ்வார்களும் ஒரே சொல்லால் பல
திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

     ஆனால் இப்பாடலில் இத்தலத்தின் பெயரைக் குறிக்காமல் கள்வா
என்று மட்டும் குறிக்கிறார். கள்வன் என்னும் சொல் நம் மாயனுக்கே உரித்த
தனிச் சொல்லாகி சர்வசாதாரணமானதாக வழங்குவதாகும். மேலும் இதில்
கார்வானத்துள்ளாய் என்று கார்வான திவ்ய தேசத்தை தனியாகவும், கள்வா
என்னும் சொல்லால் கள்வா என்று பெருமாளின் பெயரைத் தனியாகவும்,
மங்களாசாசனம் செய்தார் என்று கொள்ளவும் இடமுண்டு. அதாவது
கார்வானம் என்று ஒரு திவ்ய தேசத்தையும் கள்வா என்று மற்றுமோர் திவ்ய
தேசத்தையும் மங்களாசாசித்துள்ளார் என்றும் கொள்ளலாம்.

     அன்றியும் கள்வன் என்ற பெயரில் வேறு இரண்டு திவ்ய தேசத்து
எம்பெருமான்களுக்கும் திரு நாமம் உண்டு.

     1. ஸ்ரீ வைகுண்ட கள்ளப்பிரான்

     2. திருமாலிருஞ்சோலைக் கள்ளழகர் திருமாலிருஞ் சோலைக்கு பயின்று
வந்த பாக்களில் எல்லாம் மாயன் என்ற சொல்லால் மங்களாசாசனம்
செய்திருப்பது, மறைமுகமாக சுட்டுவதாகவே கொள்ளலாம்.